ஒதுங்கி கொண்ட அதிமுக முக்கிய புள்ளிகள் : கலக்கத்தில் பாஜக வேட்பாளர்!!

 

ஒதுங்கி கொண்ட அதிமுக முக்கிய புள்ளிகள் : கலக்கத்தில் பாஜக வேட்பாளர்!!

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளில் ஒன்று ராமநாதபுரம். ராமநாதபுரத்தில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் இந்த தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஒதுங்கி கொண்ட அதிமுக முக்கிய புள்ளிகள் : கலக்கத்தில் பாஜக வேட்பாளர்!!

இந்த சூழலில் அதிமுக தலைவர்கள் ஒத்துழைப்பு இல்லாததால் பாஜக வேட்பாளர் பிரச்சாரத்தில் மந்தநிலை நிலவுவதாக அக்கட்சி தொண்டர்கள் கவலை தெரிவித்துவருகின்றனர்.முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சீட் கிடைக்காத விரக்தியில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இன்னும் வரவில்லையாம். இதனால் அவரது வீட்டிற்கே சென்ற மத்திய இணை அமைச்சர் வி. கே. சிங், மணிகண்டன் தந்தையும் , அதிமுக மாவட்ட அவைத் தலைவருமான முருகேசனை சந்தித்துப் பேசினார். இருப்பினும் மணிகண்டன் இன்னும் தொகுதிக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.

ஒதுங்கி கொண்ட அதிமுக முக்கிய புள்ளிகள் : கலக்கத்தில் பாஜக வேட்பாளர்!!

அத்துடன் அதிமுக மூத்த தலைவரும் , ராமநாதபுரம் முன்னாள் எம்பியுமான அன்வர் ராஜாவும் பாஜக பிரச்சாரத்தில் கலந்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.இப்படியே போனால் எப்படி வெற்றி பெற முடியும் என பாஜக வேட்பாளர் குப்புராமு மற்றும் அவரது ஆதரவாளர்கள் திணறி வருகிறார்கள்.