நள்ளிரவில்.. பண மூட்டையுடன் சிக்கிய ‘அதிமுக பிரமுகர்’!

 

நள்ளிரவில்.. பண மூட்டையுடன் சிக்கிய ‘அதிமுக பிரமுகர்’!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பணப்பட்டுவாடாவை தடுக்கும் பொருட்டு வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பணம் அதிகமாக வைத்திருப்பவர்கள், பணப்பட்டுவாடா செய்வதாக கிடைக்கப்பெறும் தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெறுகிறது.

நள்ளிரவில்.. பண மூட்டையுடன் சிக்கிய ‘அதிமுக பிரமுகர்’!

அந்த வகையில், தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் வசித்து வரும் ஆசிரியர் குமார் என்பவரது வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தேர்தல் அலுவலருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் குமார் வீட்டை கண்காணித்துக் கொண்டிருந்துள்ளனர். நள்ளிரவு குமாரின் மனைவி கவிதா, பணத்தை ஒரு பையில் கட்டி தூக்கி வீசியிருக்கிறார். அதை அதிமுக பிரமுகர் நேதாஜி எடுத்துக் கொண்டு சென்றுள்ளார். உடனடியாக அந்த நபரை தேர்தல் பறக்கும் படையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அதிமுகவை சேர்ந்த சரணவன் என்பவர் குமாரிடம் இருந்து பணத்தை வாங்கிக் கொண்டு வரச் சொன்னதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து, தேர்தல் பறக்கும் படையினர் குமாரின் வீட்டை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குமாரின் மனைவி கவிதா அதிமுக பிரமுகரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.