அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல் தகனம் : இறுதிவரை இருந்த ஓபிஎஸ் – ஈபிஎஸ்

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல் தகனம் : இறுதிவரை இருந்த ஓபிஎஸ் – ஈபிஎஸ்

மறைந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல் வண்ணாரப்பேட்டை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

அதிமுக முன்னாள் அமைச்சரும், அவைத் தலைவருமான மதுசூதனன் நேற்று உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 80. கடந்த சில நாட்களாகவே மூச்சுத்திணறல் காரணமாக அவதிப்பட்டு வந்த இவர் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று உடல்நிலை மிகவும் மோசமாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல் தகனம் : இறுதிவரை இருந்த ஓபிஎஸ் – ஈபிஎஸ்

எம்ஜிஆர் ரசிகனாக தனது வாழ்க்கையை தொடங்கிய மதுசூதனன், அவர் அதிமுகவை தொடங்கியவுடன் அக்கட்சியில் இணைந்தார். 2007ஆம் ஆண்டு முதல் அதிமுகவின் அவைத்தலைவராக இருந்து வந்த இவர் 1991 ஆர்கே நகர் தேர்தலில் வெற்றி பெற்று ஜெயலலிதா அமைச்சரவையில் கைத்தறி மற்றும் ஜவுளித் துறை அமைச்சராக பொறுப்பேற்றவர். 2017 ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக ஓபிஎஸ் – ஈபிஎஸ் அணி என இரண்டாக உடைந்தபோது பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இருந்தார் மதுசூதனன்.

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல் தகனம் : இறுதிவரை இருந்த ஓபிஎஸ் – ஈபிஎஸ்

தண்டையார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் மதுசூதனனின் உடல் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவரது உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் , அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி , சசிகலா உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் பாகுபாடின்றி வந்து நேரில் அஞ்சலி செலுத்தினர்.

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல் தகனம் : இறுதிவரை இருந்த ஓபிஎஸ் – ஈபிஎஸ்

இந்நிலையில் சென்னையில் மறைந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனின் இறுதி ஊர்வலத்தில் ஓபிஎஸ் – ஈபிஎஸ் இருவரும் கலந்து கொண்டனர். தண்டையார் பேட்டையில் இருந்து மூலக்கொத்தளம் மின் மயானத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்ட நிலையில் மதுசூதனனின் உடல் தகனம் செய்யப்பட்டது.