சிபாரிசு இல்லாத ஒரே கட்சி அதிமுக – அமைச்சர் கே.சி.வீரமணி

 

சிபாரிசு இல்லாத ஒரே கட்சி அதிமுக – அமைச்சர் கே.சி.வீரமணி

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் வணிகவரி துறை அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர்,தமிழகத்தில் சிபாரிசு இல்லாத ஓரே கட்சி அதிமுக தான் என்றும், உழைக்கும் தொண்டர்களை அடையாளம் கண்டு உயர்ந்த இடத்தில் வைக்கும் ஓரே கட்சி அதிமுக என்றும் கூறினார். மேலும்,
தான் இளைஞராக இருந்தபோது அதிமுகவில் இணைந்ததாகவும், முதன்முதலில் கிளை செயலாளராக இருந்த தான் இன்று அமைச்சராக இருப்பதாகவும் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

சிபாரிசு இல்லாத ஒரே கட்சி அதிமுக – அமைச்சர் கே.சி.வீரமணி