அதிமுகவில் புதிய நிர்வாகிகளை ஓபிஎஸ் – ஈபிஎஸ் நியமிக்க தடையில்லை – சென்னை உயர்நீதிமன்றம்

அதிமுகவில் புதிய நிர்வாகிகளை ஓபிஎஸ் – ஈபிஎஸ் நியமிக்க தடையில்லை – சென்னை உயர்நீதிமன்றம்

அதிமுகவில் புதிய நிர்வாகிகளை நியமிக்க தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அதிமுகவில் புதிய நிர்வாகிகளை ஓபிஎஸ் – ஈபிஎஸ் நியமிக்க தடையில்லை – சென்னை உயர்நீதிமன்றம்

திண்டுக்கல் மாவட்டம் அவிலிப்பட்டியை சேர்ந்த வழக்கறிஞர் சூர்யமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பொதுச்செயலாளர் பதவி கலைக்கப்பட்டது. இதையடுத்து கட்சியின் சட்ட திட்டங்களின் படி அனைத்து உறுப்பினர்களும் தேர்வு செய்து பொதுச்செயலாளரை நியமிக்க வேண்டும். கட்சிக்கு உட்கட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும்.ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் தேர்தல் நடத்தப்படாமல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் , இணை ஒருங்கிணைப்பாளர் புதிய பதவிகளை உருவாக்கி கட்சி நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கு மனு அனுப்பியும் எந்த பதிலும் இல்லை. இதனால் புதிய பொதுச்செயலாளர் பதவி உட்பட நிர்வாகிகள் உட்கட்சி தேர்தல் நடத்தும் வரை ஒருங்கிணைப்பாளர் , இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் புதிய நிர்வாகிகளை நியமிக்க தடை விதிக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.

அதிமுகவில் புதிய நிர்வாகிகளை ஓபிஎஸ் – ஈபிஎஸ் நியமிக்க தடையில்லை – சென்னை உயர்நீதிமன்றம்

இந்நிலையில் அதிமுகவில் உட்கட்சி தேர்தல் நடத்தும் வரை, புதிய நிர்வாகிகள் நியமனத்துக்கு தடை விதிக்க கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், வழக்கு தொடர மனுதாரருக்கு முகாந்திரம் இல்லை. எனவே அதிமுகவில் புதிய நிர்வாகிகளை நியமிக்க ஓபிஎஸ் – ஈபிஎஸ் இருவரும் தடையில்லை என்றும் உத்தரவிட்டார்.