“சிறுபான்மை மக்களுக்கு அதிமுக அரசு உறுதுணையாக இருக்கும்” – அமைச்சர் பென்ஜமின்

 

“சிறுபான்மை மக்களுக்கு அதிமுக அரசு உறுதுணையாக இருக்கும்” – அமைச்சர் பென்ஜமின்

திருவள்ளூரில் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் நேற்று கிறிஸ்துமஸ் பெருவிழா நடைபெற்றது. இதில் அமைச்சர் பென்ஜமின், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உள்ளிட்டோர் கலந்துகொண்டு, கேக் வெட்டி கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினர். தொடர்ந்து, ஆயிரம் பேருக்கு சேலை மற்றும், பிரியாணி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பென்ஜமின், சிறுபான்மையின மக்களின் உரிமைகள் மற்றும் தேவைகளுக்காக குரல் கொடுக்கக் கூடிய ஒரு அரசாக, அதிமுக அரசு திகழ்வதாக தெரிவித்தார்.

“சிறுபான்மை மக்களுக்கு அதிமுக அரசு உறுதுணையாக இருக்கும்” – அமைச்சர் பென்ஜமின்

கிறிஸ்துமஸ், ரமலான் நோன்பு திறப்பு போன்ற அனைத்து மத நிகழ்ச்சிகளுக்கும், தனது சொந்த செலவில் விழா நடத்தியவர் ஜெயலலிதா என குறிப்பிட்ட அமைச்சர் பென்ஜமின், சில கட்சிகள் தேர்தலுக்காகவும், வாக்குகளுக்காகவும் நாடகம் ஆடக் கூடியவர்கள் என்றும் குற்றம்சாட்டினார். அத்துடன், புதிய கல்விக் கொள்கையில் எந்த ஒரு சூழ்நிலையிலும் சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பு வராத வண்ணம், அரசு பாதுகாக்கும் என கூறிய அமைச்சர் பென்ஜமின, ஜெயலலிதாவின் வழியில் எடப்பாடியாரின் அரசும் சிறுபான்மை மக்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.