அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தோல்வி!

 

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தோல்வி!

கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்ட அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தோல்வியை சந்தித்துள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தோல்வி!

சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடந்து வருகிறது. இதில் திமுக முன்னிலை வகித்து வரும் நிலையில் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.இந்த சூழலில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர தொகுதியாக கருதப்பட்ட கோவில்பட்டி பகுதியில் முடிவு வெளியாகியுள்ளது.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தோல்வி!

இந்நிலையில் கோவில்பட்டியில் அதிமுக சார்பில் கடம்பூர் ராஜு போட்டியிட்ட நிலையில் அமமுக சார்பில் டிடிவி தினகரன் களம் கண்டார். அத்துடன் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சீனிவாசனும் , நாம் தமிழர் கட்சி சார்பில் கோமதியும், மக்கள் நீதி மையம் சார்பில் கதிரவனும் களத்தில் இருந்தனர். கோவில்பட்டியில் தொடர்ந்து அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜு முன்னிலை வகித்த நிலையில் டிடிவி தினகரன் தோல்வியை தழுவியுள்ளார். கோவில்பட்டி தொகுதியில் 12,403 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜூ வெற்றி பெற்றுள்ளார்.