‘பரப்புரையில் ஓரங்கட்டப்படும் குஷ்பு’ ; உண்மை என்ன?

 

‘பரப்புரையில் ஓரங்கட்டப்படும் குஷ்பு’  ; உண்மை என்ன?

வருகின்ற சட்டசபை தேர்தலில் திமுக ஆயிரம் விளக்கில் போட்டியிடும் நிலையில் அதிமுக பாஜக வசம் இத்தொகுதியை ஒதுக்கியுள்ளது. அந்த வகையில் திமுக சார்பில் மருத்துவர் எழிலன், பாஜக வேட்பாளராக குஷ்பு சுந்தர், அமமுகவை சேர்ந்த வைத்தியநாதன், நாம் தமிழர் ஷெரீன் ஆகியோர் களம் காண்கின்றனர். ஆயிரம் விளக்கு தொகுதியில் கடந்த 2016ஆம் ஆண்டு திமுகவில் இருந்தவரும் தற்போதைய பாஜகவை சேர்ந்தவருமான கு.க.செல்வம் நின்று வெற்றி பெற்றார்.

‘பரப்புரையில் ஓரங்கட்டப்படும் குஷ்பு’  ; உண்மை என்ன?

தற்போது பாஜகவுக்கு தாவியுள்ள கு.க.செல்வமே தற்போது குஷ்புக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டு வருகிறார். ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுள்ள பாஜக வேட்பாளர் குஷ்பு சமீபத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தார். தற்போது வீதி வீதியாக சென்று பம்பரமாக சுற்றி வாக்கு சேகரித்து வருகிறார்.

‘பரப்புரையில் ஓரங்கட்டப்படும் குஷ்பு’  ; உண்மை என்ன?

இந்நிலையில் பாஜக வேட்பாளர் குஷ்பு காம்தார் நகர் , சூளைமேடு பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது கூட்டணி கட்சிகளான பாமக, தமாக, புரட்சி பாரதம் கட்சியினரும் அவர்களின் கொடிகளும் இடம்பெற்றிருந்தன. அதேபோல் பாஜக கட்சி கொடி அதிகமாக காணப்பட்டது. இருப்பினும் அதிமுக தொண்டர்களும் அவர்களின் கொடிகளும் இடம்பெறவில்லை.

‘பரப்புரையில் ஓரங்கட்டப்படும் குஷ்பு’  ; உண்மை என்ன?

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த குஷ்பு, ” அதிமுக நிர்வாகிகள் எனக்காக வாக்கு சேகரித்து வருகிறார்கள். எனக்கு ஆதரவாக துணை முதல்வர் ஓபிஎஸ் பரப்புரை செய்தார். பாஜகவும் அதிமுகவும் இணைக்கமான சூழலில் தான் இருக்கிறோம்” என்றார்.