தேர்தல் தொடர்பாக வரும் 14 ஆம் தேதி அதிமுக மீண்டும் ஆலோசனை கூட்டம்!

 

தேர்தல் தொடர்பாக வரும் 14 ஆம் தேதி அதிமுக மீண்டும் ஆலோசனை கூட்டம்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் சூழலில் தேர்தலை சந்திப்பதற்கான ஆயத்த பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளன. அந்த வகையில் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து அதிமுக கடந்த மாதம் 20 ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்தியது. அதாவது அமித்ஷா வருவதற்கு முதல் நாள் முன்பு பாஜகவுடனான தொகுதி உடன்பாடு குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் தேர்தல் குறித்து வரும் 14 ஆம் தேதி அதிமுக மீண்டும் ஆலோசனை நடத்தவுள்ளது.

தேர்தல் தொடர்பாக வரும் 14 ஆம் தேதி அதிமுக மீண்டும் ஆலோசனை கூட்டம்!

இதுகுறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், கழக இணைய ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் தலைமை கழகத்தில் வருகின்ற 14.12.2020 திங்கட்கிழமை மாலை நான்கு முப்பது மணிக்கு மண்டல பொறுப்பாளர்கள், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மாவட்ட கழக செயலாளர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. கடந்த 20.1.2020 அன்று தலைமை கழகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின்போது சட்டமன்ற பொதுத் தேர்தல் சம்பந்தமாக என்னென்ன பணிகளை செய்ய வேண்டும் என்பது குறித்து வழங்கப்பட்ட ஆலோசனைகளின் படி தாங்கள் மேற்கொண்ட பணிகள் குறித்த அனைத்து விவரங்களுடன் ஆலோசனைக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.