Home அரசியல் அதிமுக செயற்குழு! நாளைய பொழுது யாருக்கு விடியும்?

அதிமுக செயற்குழு! நாளைய பொழுது யாருக்கு விடியும்?

இப்போதும் அதிமுகவின் இரட்டை இலைகள் என்றுதான் ஈபிஎஸ்சையும் ஓபிஎஸ்சையும் ஆதரவாளர்கள் சொல்லி வருகிறார்கள். ஆனாலும், ‘முதல்வர்
வேட்பாளர் யார்?’என்பதில்தான் இலைகள் கிழியும் அளவுக்கு இருதரப்பும் மல்லுகட்டுகிறது.

representative image

அண்மையில் நடந்த அதிமுக ஆலோசனக்கூட்டத்தில் ஈபிஎஸ் -ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பேச்சு பரபரப்பை கூட்டியது என்றால், ஈபிஎஸ், ஓபிஎஸ்சின் பேச்சு பதற்றத்தை உண்டாக்கியது.

அந்த அளவுக்கு அதிரடியாக நடந்த அந்த ஆலோசனக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படிதான் நாளை(28.9.2020) அதிமுக செயற்குழு கூடுகிறது.
இக்கூட்டத்திற்கு தலைமை செயற்குழு உறுப்பினர்கள், தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கிறார்கள்.

இந்த செயற்குழுவில் எடுக்கின்ற முடிவின்படிதான் அதிமுகவினர் தேர்தல் வேலைகளை தொடங்க முடியும் என்பதால், முக்கியமான செயற்குழுகூட்டமாக
அக்கட்சியினரால் பார்க்கப்படுகிறது. தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ்சும் இக்கூட்டத்தை இறுதியுத்தமாகவே நினைத்துக்கொண்டிருக்கிறாராம். தனது
படையினரையும் தயார்படுத்தி வைத்திருப்பதாக தகவல்.

ஆனால், ஈபிஎஸ்க்கு யாரையும் தயார்படுத்த வேண்டும் என்கிற நிலை இல்லை என்கிறார்கள். அவருக்கு தானா சேர்ந்த கூட்டம் இருக்குதாம். அதனால்
செயற்குழுவில் ஈபிஎஸ்சுக்குத்தான் மெஜாரிட்டி இருக்கும் என்ற பேச்சு உலவுகிறது. சில கருத்துக்கணிப்புகளும் ஈபிஎஸ்சுக்குதான் சாதகமாக இருக்கிறது.
ஈபிஎஸ்சினால் கட்சியினருக்கு ஒரு குறையும் இல்லை என்பதால் அவரை வழிமொழியவே விரும்புகிறார்களாம் நிர்வாகிகள். அதிமுக ஆட்சியை சிறப்பாக
நடத்திச்செல்லும் ஈபிஎஸ்சின் இந்த ஆளுமைதான் கட்சிக்கும் தேவை என்றும் கருகிறார்களாம்.

இந்த விவகாரம் எல்லாம் ஓபிஎஸ் தரப்பு காதுக்கு போகாமலா இருக்கும். அப்படி இருந்தும் அவர் போட்டிக்கு வருகிறார் என்றால், அவர் சைடும் கொஞ்சம்
ஆதரவை திரட்டி வைத்திருக்கக்கூடும் என்கிறார்கள்.

திமுகவில் எந்த குழம்பமும் இன்றி முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின் தான் என்று முடிவாகிவிட்டது. ஆனால், அதிமுகவில் இந்த முறை அப்படி சுலபத்தில்
முடிவெடுக்க முடியாது என்பது எல்லோரும் எதிர்பார்த்த ஒன்றுதான். அந்த ஒரு நெருக்கடியான கட்டத்திற்குத்தான் வந்திருக்கிறது அதிமுக.
இருந்தாலும், இன்றைய இரவு முடிந்து, நாளை யாருக்கு(ஈபிஎஸ் – ஓபிஎஸ்) பொழுதுவிடியும் என்றே அதிமுகவினர் மட்டுமல்லாது மற்ற கட்சியினரும்
படபடப்போடுதான் எதிர்பார்த்திருக்கிறார்கள்.

  • கதிரவன்

மாவட்ட செய்திகள்

Most Popular

தீயணைப்புத்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

தர்மபுரியில் கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, மாவட்ட தீயணைப்பு கமாண்டோ வீரர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்ற சைக்கிள் பேரணி நடைபெற்றது.

ஈரோடு: கட்டிட தொழிலாளி அடித்துக்கொலை – 3 பேர் கைது

ஈரோடு அருகே கூலிப்பணம் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் 19 வயது இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் வீரப்பன்(19)....

சென்னை விமான நிலையத்தில் அமெரிக்கா டாலர் பறிமுதல்

கொரொனா தொற்று அதிகரித்து வரும் இந்தச் சூழலைக் கடத்தல் காரர்களும் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார்கள். சென்னை விமான நிலையத்தில் ஓரிரு மாதங்களாக தங்கம், கரன்சி கடத்தப்படுவது தடுக்கப்படுகிறது. சமீபத்தில் இது அதிகரித்திருக்கிறது.

டார்ச்சர் தந்த டாக்டர்கள்! துப்பட்டாவில் தூக்கிட்டு நர்ஸ் தற்கொலை

குஜராத் மாநிலம் சூரத்தில் மேகா ஆச்சார்யா(28) என்ற பெண் நர்ஸாக இருந்து வந்தார். மேகாவின் கணவர் வேலை நிமித்தமாக வெளி ஊரில் தங்கி இருந்த நிலையில், மேகா வீட்டில் துப்பாட்டாவால்...
Do NOT follow this link or you will be banned from the site!