ஆடு மேய்க்கும் ஜெயலலிதாவின் விசுவாசி

 

ஆடு மேய்க்கும் ஜெயலலிதாவின் விசுவாசி

சாத்தான்குளம் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையில் ஆடு மேய்க்கும் வீடியோ வைரலாகிவருகிறது.

ஆடு மேய்க்கும் ஜெயலலிதாவின் விசுவாசி

கடந்த 2003 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குள, தமாகா எம்.எல்.ஏவாக இருந்த எஸ்.எஸ். மணிநாடார் உயிரிழந்ததையடுத்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அங்கு காங்கிரஸ் மற்றும் அதிமுக இடையே போட்டி நிலவிய நிலையில், அதிமுக வேட்பாளராக நீலமேகவர்ணம் நிறுத்தப்பட்டார். 5ஆம் வகுப்பு மட்டுமே படித்த நீலமேகவர்ணம், ஒரு விவசாயி. இருப்பினும் அவர் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு வழங்கியதுடன், 7 நாட்கள் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டார் ஜெயலலிதா. அதன்பலனாக நீலமேகவர்ணம் வெற்றிப்பெற்றார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின் புறக்கணிக்கப்பட்ட நீலமேகவர்ணம் தற்போது தனது சொந்தவூரில் ஆடு மேய்துவருகிறார். ஒரு கட்சியின் கிளை செயலாளராக இருப்பவரே வீடு, கார், சொத்து, சுகம் என இருக்கும் சூழலில், மிகப்பெரிய கட்சியின் எம்.எல்.ஏவாக இருந்ததவர் ஆடு மேய்த்தும், விவசாயம் பார்த்துக்கொண்டும் எளியாமையான வாழ்க்கையை வாழ்வது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.