முன்னாள் அமைச்சரின் மனைவி ஓய்வூதியம் கோரி, ஆட்சியரிடம் மனு

 

முன்னாள் அமைச்சரின் மனைவி ஓய்வூதியம் கோரி, ஆட்சியரிடம் மனு

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் ஒய்வூதியம் வழங்கக்கோரி, அதிமுக முன்னாள் அமைச்சரின் மனைவி கண்ணீர் மல்க மனு அளித்தார்.

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அடுத்த சின்னக்குப்பம் பகுதியை சேர்ந்தவர், அதிமுக முன்னாள் அமைச்சர் வி.சுப்பிரமணியன்(70). கடந்த 2010ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இவரது இரண்டாவது மனைவி கமலம் (69). இன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த கமலம், தனது கணவருக்கான வாரிசு ஓய்வூதியம் வழங்க வேண்டுமென கண்ணீர் மல்க கோரிக்கை மனுவை வழங்கினார்.

முன்னாள் அமைச்சரின் மனைவி ஓய்வூதியம் கோரி, ஆட்சியரிடம் மனு

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமலம், தனது கணவர் கடந்த 2010ஆம் ஆண்டு உயிரிழந்ததாகவும், இதனால் வாரிசு ஓய்வூதியம் பெறுவதற்காக அனைத்து ஆவணங்களையும் அதிகாரிகளிடம் வழங்கி இருப்பதாகவும் கூறினார். இந்த நிலையில், முதல் மனைவியின் மகன் எதிர்ப்பு காரணமாக ஓய்வூதியம் வழங்காமல் அதிகாரிகள் அலைக்கழித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

தனக்கு குழந்தைகள் இல்லாததால் விழுப்புரத்தில் உறவினர்களுடன் தங்கி இருந்து வருவதாக கூறிய அவர், வறுமையினால் கடந்த 10 ஆண்டுகளாக போராடி வரும் தனக்கு ஓய்வூதியம் வழங்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.