அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஆலோசனை!

 

அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஆலோசனை!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் தேர்தல் அறிக்கை குழு ஆலோசனை நடத்தி வருகிறது.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே எஞ்சியிருப்பதால், பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக தேர்தல் பணியில் அதிரடியாக களமிறங்கியுள்ளன. ஜெயலலிதா, கருணாநிதி போன்ற மாபெரும் தலைவர்கள் இல்லாமல் நடைபெற உள்ள முதல் சட்டமன்றத் தேர்தல் என்பதால், அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தேசிய கட்சியே என்றாலும் தமிழகத்தை பொறுத்தவரையில் கூட்டணி அமைக்க வேண்டியது தான். இத்தகைய சூழலில், சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் திமுக நேரடியாக களம் காணுகின்றன.

அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஆலோசனை!

தேர்தலை எதிர்நோக்கி முதற்கட்ட பரப்புரையை முடித்த திமுக தலைவர் மு.க ஸ்டாலின், அடுத்த கட்ட பரப்புரையை வரும் 29ம் தேதி முதல் தொடங்கவிருக்கிறார். இதனிடையே தேர்தல் அறிக்கை குழு அமைத்து, அந்த பணிகளும் நிறைவடைந்து விட்டன. அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பூசலால், தேர்தல் பணிகள் சற்று தாமதமாக தொடங்கியிருந்தாலும் தற்போது விறுவிப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் தேர்தல் அறிக்கை குழு ஆலோசனை நடத்தி வருகிறது. அதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். கடந்த ஆண்டு இறுதியிலும் தேர்தல் அறிக்கை குழு, புதிய வியூகங்களை வகுப்பது குறித்தும் வாக்காளர்களை கவருவது குறித்தும் முக்கிய ஆலோசனை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.