“தேர்தல் பிரச்சாரத்திற்கு அதிமுக அழைக்கவில்லை” : பிரேமலதா விஜயகாந்த்

“தேர்தல் பிரச்சாரத்திற்கு அதிமுக அழைக்கவில்லை” :  பிரேமலதா விஜயகாந்த்

எம்ஜிஆரை உரிமை கொண்டாடுபவர்கள் அவருக்காக என்ன செய்தார்கள் என்று பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

“தேர்தல் பிரச்சாரத்திற்கு அதிமுக அழைக்கவில்லை” :  பிரேமலதா விஜயகாந்த்

சென்னை மதுரவாயல் மற்றும் போரூரில் தேமுதிகவின் சார்பில் கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டது. அதில் கலந்துகொண்ட பிரேமலதா விஜயகாந்த், “கேப்டன் விஜயகாந்திற்கு கருப்பு எம்ஜிஆர் என்ற பட்டத்தை கொடுத்தது மக்கள் தான். அவருக்கு தான் ஜானகி அம்மாள் எம்ஜிஆரின் பிரச்சார வாகனத்தை அளித்தார்.

“தேர்தல் பிரச்சாரத்திற்கு அதிமுக அழைக்கவில்லை” :  பிரேமலதா விஜயகாந்த்

எம்ஜிஆர் காது கேளாதோர் பள்ளிக்கு ஆண்டுதோறும் உதவித்தொகை அளித்து வந்தது விஜயகாந்த் தான். தற்போது புதிதாக எம்ஜிஆரை உரிமை கொண்டாடுபவர்கள் அவருக்காக என்ன செய்தார்கள்?.
தேமுதிக இருக்கும் அணிதான் தேர்தல் வெற்றிபெறும். நாளை மறுநாள் நடைபெற இருக்கும் அதிமுகவின் பிரச்சாரக் கூட்டத்திற்கு எந்த அழைப்பும் இதுவரை வரவில்லை” என்றார்.

“தேர்தல் பிரச்சாரத்திற்கு அதிமுக அழைக்கவில்லை” :  பிரேமலதா விஜயகாந்த்

வரும் டிசம்பர் 27 ஆம் தேதி அதிமுக சார்பில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் தலைமையில் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் தேர்தல் பிரச்சாரப் பணிகளைத் துவக்கி மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கட்சி நிர்வாகிகளும், கட்சி உடன்பிறப்புகளும், பொதுமக்களும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.