“சசிகலா ஆடியோ உள்ளிட்ட முக்கிய விஷயங்கள்” அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று கூடுகிறது!

 

“சசிகலா ஆடியோ உள்ளிட்ட முக்கிய விஷயங்கள்”  அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று கூடுகிறது!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெறுகிறது. 

“சசிகலா ஆடியோ உள்ளிட்ட முக்கிய விஷயங்கள்”  அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று கூடுகிறது!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. இந்த சூழலில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4 மணிக்கு கூடுகிறது. சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்குப் பிறகு முதல் முறையாக அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கூடுவது கவனிக்கத்தக்கதாக மாறியுள்ளது.

“சசிகலா ஆடியோ உள்ளிட்ட முக்கிய விஷயங்கள்”  அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று கூடுகிறது!

9 மாவட்டங்களில் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் சசிகலா ஆடியோ விவகாரம் தொடர்பாகவும், சட்டமன்றத் தேர்தலில் தோல்வி குறித்தும் , உள்ளாட்சி தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அத்துடன் அதிமுக கட்சி தொடங்கி 50 ஆண்டுகள் ஆகும் நிலையில் அதனை சிறப்பாக கொண்டாடும் அதற்கான திட்டமிடலும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.