குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்!

 

குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்!

நீலகிரி:
நீலகிரி மாவட்டம், குன்னூரில், அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில், நடைபெற்ற கூட்டத்தில், அதிமுக இளைஞர் அணியினர் தகவல் தொழில் நுட்ப பிரிவில் எவ்வாறு செயல்பட வேண்டும் என விளக்கம் அளிக்கப்பட்டது. தகவல் தொழில்நுட்பப் பிரிவின் செயல்பாடுகள் பற்றியும், பொறுப்புகள் குறித்தும் கப்பச்சி வினோத் விளக்கம் அளித்தார். இளைஞர்களுக்கு சமூக வலைதளங்களை பயன்படுத்துவது குறித்து தொழில்முறை பயிற்சியும் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சாந்தி.அ.ராமு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.