அதிமுவின் முதல்வர் வேட்பாளர் சர்ச்சை – வாக்கு வங்கியைப் பாதிக்குமா?

 

அதிமுவின் முதல்வர் வேட்பாளர் சர்ச்சை – வாக்கு வங்கியைப் பாதிக்குமா?

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஐந்து மாதங்கள் இருக்கின்றன. ஆனால், அதிமுக – திமுக இரு கட்சிகளும் பிரசாரத்தை முடுக்கி இரு வாரங்களுக்கு மேலாகி விட்டது.

திமுக கூட்டணியில் மு.க.ஸ்டாலின் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை கூட்டணி கட்சிகள் ஏற்றுக்கொண்டு விட்டன. அதனால், அந்தக் கூட்டணியில் இந்த விவகாரத்தில் சிக்கல் ஏதுமில்லை.

அதிமுவின் முதல்வர் வேட்பாளர் சர்ச்சை – வாக்கு வங்கியைப் பாதிக்குமா?

ஆனால், அதிமுகவில் தொடக்கம் முதலே இது பெரிய சிக்கலாக இருந்து வருகிறது. கட்சிக்குள் ஓ.பன்னீர் செல்வமா, எடப்பாடி பழனிச்சாமியா இருவரில் யார் முதல்வர் வேட்பாளர் என்ற விவாதம் ஓடியது. அக்டோபர் முதல்வாரத்தில் சில சமரசங்கள் நடைபெற்று, எடப்பாடி பழனிச்சாமியே முதல்வர் வேட்பாளர் என பன்னீர்செல்வமே அறிவித்தார்.

எனவே, அதிமுக சார்பில் பிரசாரத்தை உடனே தடபுடலாகத் தொடங்கினார். அதுவும் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு அனைத்துச் சேனல்களிலும் அடிக்கடி ஒளிப்பராகியும் வருகின்றன.

அதிமுவின் முதல்வர் வேட்பாளர் சர்ச்சை – வாக்கு வங்கியைப் பாதிக்குமா?

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக முதல்வர் வேட்பாளர் விஷயத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை பாரதிய ஜனதா கட்சியின் தலைமையே இறுதி முடிவு செய்யும்” என்று தமிழக மாநில தலைவர் எல்.முருகன் நெருப்பைக் கொளுத்தி போட்டார். அதற்கு அதிமுக தரப்பில் பதில் சொல்லப்பட்டது.

பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, “அதிமுக – பாஜக இந்தக் கூட்டணியில் எவ்வித குழப்பும் பிரச்சனையும் இல்லை. பாஜகவின் தேசிய தலைமை பொறுப்புகளில் உள்ளவர்கள் ஏறு வேலைகளில் பிஸியாக இருந்து வருவதால் தமிழ்நாடு வேட்பாளர் யார் என்பது அறிவிப்பதில் குழப்பம் நீடித்து வருகிறது” என்று சொல்லியிருக்கிறார்.

அதிமுவின் முதல்வர் வேட்பாளர் சர்ச்சை – வாக்கு வங்கியைப் பாதிக்குமா?

பாஜக மேலிட பொறுப்பாளர் ரவியோ, தேர்தல் முடிந்தபிறகுதான் முதல்வர் வேட்பாளரை தேசிய ஜனநாயகக் கூட்டணி கூடி முடிவு செய்யும் என்று சொல்லிவிட்டார். இது சிக்கலை இன்னும் அதிகப்படுத்தியது.

அதிமுகவின்  கூட்டணியில் அதிமுகவுக்கு அடுத்து அதிக வாக்கு வங்கி கொண்டுள்ள பாமகவின் மூத்த தலைவர் ஜி.கே. மணி, ‘அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி. கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை ராமதாஸ் அறிவிப்பார்’ என்று கூறியிருப்பது எரியும் தீயில் எண்ணெய்யை விட்டது போலாகி விட்டது.

அதிமுவின் முதல்வர் வேட்பாளர் சர்ச்சை – வாக்கு வங்கியைப் பாதிக்குமா?

இந்த விவகாரம் நீடித்துக்கொண்டே செல்வது என்னவாகும்? அதிமுக கூட்டனியின் வாக்கு வங்கியைப் பாதிக்குமா?

நிச்சயம் பாதிக்கும் என்றே கணிக்கப்படுகிறது. ஏனெனில், இந்த விவகாரத்தை வைத்து கூட்டணி கட்சிகள் தொகுதிகளை அதிகம் பெற முயற்சி செய்யும். அதனால், அதிமுக போட்டியிடும் தொகுதி குறையும். எனவே, தொண்டர்களுக்கு உற்சாகமும் குறையும்.

இந்த விவகாரத்தில் ஓர் இணக்கம் வரும் வரை கீழ் மட்டத்தில் கூட்டணி கட்சித் தொண்டர்கள் இணைந்து பணியாற்றுவதில் சுணக்கம் காட்டுவார்கள். அதனால், வாக்கு வங்கியை உறுதிப்படுத்துவது தாமதமாகும். இதனால் எதிர்க்கூட்டணிக்கே லாபமாகும் வாய்ப்பு இருக்கிறது.