அதிமுக முதல்வர் வேட்பாளர் நாளை திட்டமிட்டபடி அறிவிப்பு!

 

அதிமுக முதல்வர் வேட்பாளர் நாளை திட்டமிட்டபடி அறிவிப்பு!

அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜு விளக்கமளித்துள்ளார்.

ஒட்டுமொத்த அரசியல் களமே எதிர்நோக்கும் ஒரே விஷயம் அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? என்பது தான். நாளை முதல்வர் வேட்பாளர்அறிவிப்பு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்ட நிலையில் ஓபிஎஸ் – ஈபிஎஸ் தனித்தனியே ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிமுக முதல்வர் வேட்பாளர் நாளை திட்டமிட்டபடி அறிவிப்பு!

இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜு, திட்டமிட்டபடி நாளை அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளார்.

அதிமுக முதல்வர் வேட்பாளர் நாளை திட்டமிட்டபடி அறிவிப்பு!

இதனிடையே முதல்வர் பழனிசாமியுடனான ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் ஆர்பி உதயகுமார், கடம்பூர் ராஜு, செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.அதே சமயம் ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் தங்கமணி, எஸ்.பி. வேலுமணி , ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

பாஜகவின் நயினார் நாகேந்திரன் அக். 7 ஆம் தேதி முதல்வர் வேட்பாளர் குறித்து அறிவிப்பு வெளியாகாது என்று கூறிய நிலையில் அமைச்சரின் இந்த பேட்டியானது அதிமுக தொண்டர்கள்மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.