10 மணிக்கு அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு!

 

10 மணிக்கு அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு!

அதிமுக முதல்வர் வேட்பாளர் பற்றிய அறிவிப்பு காலை 10 மணிக்கு வெளியாகிறது.

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிப்பானது காலை 9.30 மணியில் இருந்து 10 மணிக்குள் அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுகிறார். இதனால் காலை 9.05 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் அதிமுக தலைமை அலுவலகம் வருகின்றனர்.

10 மணிக்கு அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு!

இதனால் ராயப்பேட்டை சாலையின் இருபக்கமும் தொண்டர்கள் குவிந்துள்ளனர். அதிமுக தலைமை அலுவலகம் முன்பு புலிவேஷம் கட்டி ஈபிஎஸ் ஆதரவாளர்கள் ஆட்டம் போட்டு வருகின்றனர். தொண்டர்கள் அதிகளவில் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ராயப்பேட்டையில் 500ற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

10 மணிக்கு அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு!

முன்னதாக ஓபிஎஸுடன் பேச்சுவார்த்தை முடிந்து கிளம்பிய துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் காலை 10 மணிக்கு நல்ல செய்தி வரும் என்று அறிவித்தார். இதன் மூலம் இன்று முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.