டிச.20-இல் அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாட்டம்!

 

டிச.20-இல் அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாட்டம்!

சென்னை வர்த்தக மையத்தில் டிச.20ஆம் தேதி அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுகிறது.

டிச.20-இல் அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாட்டம்!

இயேசு கிறிஸ்து பிறந்த தினமான கிறிஸ்துமஸ் திருவிழா ஆண்டுதோறும் டிசம்பர் 25ஆம் தேதி விடப்படுவது வழக்கம். இந்த நாள் அரசு விடுமுறை தினமாகும் . இதனால் கிறிஸ்துவர்கள் பலகாரம் உண்பது , புத்தாடை அணிவது, தேவாலயம் செல்வது என கொண்டாட்டங்கள் களைகட்டும்.

டிச.20-இல் அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாட்டம்!

அத்துடன் கொரோனா பெருந்தொற்று கடந்த 9 மாத காலம் மக்களுக்கு மிகுந்த துயரத்தை அளித்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் கிறிஸ்துமஸ் விழாவை பாதுகாப்புடன் மக்கள் கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிச.20-இல் அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாட்டம்!

இந்நிலையில் சென்னை வர்த்தக மையத்தில் டிசம்பர் 20ஆம் தேதி மாலை 5 மணிக்கு அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாடப்படவுள்ளது. அழைப்பிதழுடன், தனிமனித இடைவெளியை பின்பற்றி அதிமுகவினர் கலந்துகொள்ள ஓபிஎஸ் – ஈபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளனர்.