கடைசி நேரத்தில் ஓட்டு போடாமல் திரும்பி சென்ற அதிமுக வேட்பாளர் ; ஏன் தெரியுமா?

கடைசி நேரத்தில் ஓட்டு போடாமல் திரும்பி சென்ற அதிமுக வேட்பாளர் ; ஏன்  தெரியுமா?

அதிமுக வேட்பாளர் வாக்களிக்க வந்த நிலையில் மின்னணு வாக்கு இயந்திரம் பழுதானதால் அரை மணிநேரம் காத்திருப்புக்கு பின்பு வாக்களிக்காமல் திரும்பிச் சென்றார்.

கடைசி நேரத்தில் ஓட்டு போடாமல் திரும்பி சென்ற அதிமுக வேட்பாளர் ; ஏன்  தெரியுமா?

சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இருப்பினும் சில இடங்களில் இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதமாகவே நடைபெற்றது. அந்த வகையில் திருத்தணி சட்டப்பேரவைத் தொகுதியில் 399 வாக்குச் சாவடிகளில் உள்ள நிலையில் பெரும்பாலான இடங்களில் வாக்குப்பதிவு காலை முதலே தொடங்கியது.

கடைசி நேரத்தில் ஓட்டு போடாமல் திரும்பி சென்ற அதிமுக வேட்பாளர் ; ஏன்  தெரியுமா?

இருப்பினும் திருத்தணி அமிர்தபுரம், ஆலமரம் தெரு பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை உள்ளிட்ட இடங்களில் மின்தடை மற்றும் இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு ஒருமணிநேரம் தாமதமாக தொடங்கியது. இந்த சூழலில் அமிர்தபுரம் வாக்குச்சாவடியில் அதிமுக வேட்பாளர் கோ.அரி வாக்களிக்க வரிசையில் நின்று கொண்டிருந்தார். சுமார் அரைமணிநேரம் காத்திருப்புக்கு பின்பு இயந்திர கோளாறு ஏற்பட்டது.இதனால் வாக்குப்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் நிறுத்தப்பட்டது. இதனால் வாக்களிக்க முடியாமல் அதிமுக வேட்பாளர் கோ.அரி திரும்பி சென்றார்.