10 ஆண்டு விரக்தி… ஓபிஸ் மீது மாட்டு சாணம் ஊத்திய அதிமுக தொண்டர்… அதிர்ச்சியில் உறைந்தார்!

10 ஆண்டு விரக்தி… ஓபிஸ் மீது மாட்டு சாணம் ஊத்திய அதிமுக தொண்டர்… அதிர்ச்சியில் உறைந்தார்!

மதுரை, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பிரச்சாரம் செய்ய முடியாமல் அதிமுக அமைச்சர்கள் திணறிவருவது தினமும் செய்திகளாக வெளிவருகின்றன. அதற்கு முழு முதற் காரணம் வன்னியர் உள் இடஒதுக்கீடு. இதனால் ஒரு பக்கம் சீர்மரபினர் அமைச்சர்களுக்கு எதிராக கொடி பிடிக்க முக்குலத்தோர் மண்ணை வாரி தூற்றுகின்றனர். தவிர, தொகுதிக்கு நலத்திட்டங்கள் செய்யாதது வேறு பயங்கர அதிருப்தியை அதிமுக தொண்டர்களுக்கே ஏற்படுத்தியிருக்கிறது.

10 ஆண்டு விரக்தி… ஓபிஸ் மீது மாட்டு சாணம் ஊத்திய அதிமுக தொண்டர்… அதிர்ச்சியில் உறைந்தார்!

இந்த எதிர்ப்பைச் சமாளிப்பதைத் தவிர வேறு வழியே இல்லை என்று புரிந்துகொண்டுள்ளனர் அமைச்சர்கள். அதன் வெளிப்பாடகவே தென் மாவட்ட அமைச்சர்கள் வன்னியர் இடஒதுக்கீடு தற்காலிகமானது என்று கூறிவருகின்றனர். இதே கருத்தை துணை முதல்வர் ஓபிஎஸ்ஸும் வழிமொழிந்தார். இதனை சற்றும் எதிர்பாராத ராமதாஸ் உடனே இடஒதுக்கீடு நிரந்தமானது என பரபரப்பு அறிக்கை வெளியிட்டார். அது தனிக்கதை.

10 ஆண்டு விரக்தி… ஓபிஸ் மீது மாட்டு சாணம் ஊத்திய அதிமுக தொண்டர்… அதிர்ச்சியில் உறைந்தார்!

போடியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஓபிஎஸ் களமிறங்குகிறார். மக்கள் அவருக்கு வரவேற்பு கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்து பிரச்சாரத்திற்குச் சென்றால் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி கொடுக்கின்றனர். முதல் நாள் பிரச்சாரத்திலேயே அதிமுகவைச் சேர்ந்த ஒருசிலர் எதிர் கொடி பிடிக்க ஆரம்பித்துவிட்டனர். இதே நிலை தான் தொகுதி முழுவதும் ஓபிஎஸ்ஸுக்கு ஏற்பட்டுள்ளது. இச்சூழலில் நேற்று இரவு நாகலாபுரம் பகுதியில் பிரச்சாரம் செய்துகொண்டிருந்தார்.

10 ஆண்டு விரக்தி… ஓபிஸ் மீது மாட்டு சாணம் ஊத்திய அதிமுக தொண்டர்… அதிர்ச்சியில் உறைந்தார்!

அப்போது அங்கு வந்த ஒருவர் “10 வருசமா என்னத்த பண்ணீங்க… இப்போ ஓட்டு கேக்க வந்திருக்கீங்க” என்று கேட்டவாறே கையில் எடுத்துவந்த மாட்டு சாணத்தை ஓபிஎஸ்ஸை நோக்கி ஊற்றியிருக்கிறார். நல்வாய்ப்பாக அவர் மீது படாமல் அருகிலிருந்த பாதுக்காப்பு வீரர்களின் மீது விழுந்திருக்கிறது. இதற்குப் பின் அவரைக் கையும் களவுமாகப் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். காவல் துறையினர் விசாரணையில் அவர் நாகலாபுரத்தைச் சேர்ந்த அதிமுக தொண்டர் முருகன் என்பது தெரியவந்துள்ளது. ஓபிஎஸ் 10 ஆண்டுகளாக எம்எல்ஏவாக இருந்தும் எதுவும் செய்யவில்லை என்பதால் சாணம் ஊற்றியதாக அவர் கூறியிருக்கிறார். இதனால் கடும் அதிருப்தியடைந்த ஓபிஎஸ் பிரச்சாரத்தைப் பாதியிலேயே ரத்துசெய்து விட்டு காரில் புறப்பட்டார்.