‘அமமுக தலைமையை ஏற்றால்’… அதிமுக – பாஜகவுடன் கூட்டணி!

 

‘அமமுக தலைமையை ஏற்றால்’… அதிமுக – பாஜகவுடன் கூட்டணி!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றன. அந்த வகையில் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டிருக்கும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று பிற்பகல் திடீரென சென்னை தி.நகர் இல்லத்தில் சசிகலாவுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

‘அமமுக தலைமையை ஏற்றால்’… அதிமுக – பாஜகவுடன் கூட்டணி!

அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிடிவி தினகரன், அதிமுகவுடன் அமமுக கூட்டணி அமைக்கும் என்பது யூகங்கள் தான். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைமையில் தான் ஆட்சி அமையும். திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்கான அனைத்து முயற்சிகளை செய்து வருகிறோம். சில முக்கிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. இறுதி முடிவுகள் வந்ததும் நிச்சயம் தெரிவிப்பேன் என்று கூறினார்.

தொடர்ந்து, திமுகவை எதிர்க்கும் எந்த கட்சியாக இருந்தாலும் அமமுக தலைமையுடன் வந்தால் அவர்களுடன் இணைந்து தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறோம். அதிமுக, பாஜக எங்கள் கூட்டணியில் வர மாட்டார்கள் என்பது எல்லாருக்குமே தெரியும். எந்த கட்சி மீதும் எனக்கு ஆசை இல்லை. பாஜகவை வேறு எப்படி விமர்சிப்பது? மத்திய பட்ஜெட் குறித்து எல்லா இடங்களிலும் பேசி தான் வருகிறேன் என தெரிவித்தார்.

மேலும் அதிமுக – அமமுக இணையுமா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, விடிய விடிய கதைக் கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பன் என்பது போலிருக்கிறது இந்த கேள்வி என கலாய்த்தார்.