அதிமுகவினர் கைது – பொள்ளாச்சி வழக்கு அதிமுகவுக்கு தேர்தலில் பின்னடைவா?

 

அதிமுகவினர் கைது – பொள்ளாச்சி வழக்கு அதிமுகவுக்கு தேர்தலில்  பின்னடைவா?

2019 –ம் ஆண்டு பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வன்முறை சம்பவங்களை எளிதில் யாராலும் மறந்துவிட முடியாது. பல வீடியோக்கள் அந்தச் சம்பவம் பற்றி வெளியாகின. அதில் ஒன்றில், பெல்ட் எடுத்து ஓர் இளைஞர் ஒரு பெண்ணை அடித்து பாலியல் வன்முறை செய்யும் காட்சி எல்லோரையும் உலுக்கியது.

இந்த பாலியல் வன்முறை சம்பவத்திற்கு காரணமானவர்கள் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள். அவர்களைக் காப்பாற்ற பொள்ளாச்சி, கோயம்புத்தூர் ஆளுங்கட்சி பிரமுகர்கள் முயற்சி எடுப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. பொள்ளாச்சிக்கே சென்று திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி கருணாநிதி ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

அதிமுகவினர் கைது – பொள்ளாச்சி வழக்கு அதிமுகவுக்கு தேர்தலில்  பின்னடைவா?

இந்நிலையில் அந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இன்று இந்த வழக்குத் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர்களின் அருளானந்தமும் ஒருவர். இவர் ஆளுங்கட்சியான அதிமுகவின் பொள்ளாச்சி மாணவரணி செயலாளர். அதனால், கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. உடனே அதிமுக தரப்பில் அருளானந்ததைக் கட்சியிலிருந்து நீக்கியுள்ளது.

கொடூரமான இந்த வழக்கில் அதிமுக பிரமுகர் கைதாவது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஏனெனில், நண்பர்களோடு சேர்ந்துதான் பெண்களை பண்ணை வீடுகளுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்முறை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதிமுக பிரமுகரின் நண்பர்கள் அநேகர் அக்கட்சியினராக இருக்கவே வாய்ப்பு அதிகம்.

அதிமுகவினர் கைது – பொள்ளாச்சி வழக்கு அதிமுகவுக்கு தேர்தலில்  பின்னடைவா?

அதிமுகவின் அருளானந்தம் கைது இன்னும் சில மாதகளில் வர விருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்குப் பின்னடைவாக மாறுமா என்பதே பலரின் கேள்வி.

அதிமுக 2016 ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடிக்க முக்கியக் காரணம் கொங்கு பகுதி ஓட்டுகள் சிதறாமல் அதிமுகவுக்குக் கிடைத்தன. அமைச்சரவையிலும் அந்தப் பகுதிக்கு கரிசனம் காட்டப்பட்டதாகச் சொல்லப்பட்டது. இறுதியில் கொங்குப் பகுதி சார்ந்த ஒருவரே முதல்வராகவும் ஆனார். இப்போது இந்த சம்பவத்தால் நிச்சயம் அந்தப் பகுதியில் அதிமுக கட்சிக்கு பின்னடைவைத் தரும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏனெனில், எதிர்கட்சியினர் இதைத் திரும்ப திரும்ப தேர்தல் நேரத்தில் சொல்லிக்காட்டுவார்கள்.

அதிமுகவினர் கைது – பொள்ளாச்சி வழக்கு அதிமுகவுக்கு தேர்தலில்  பின்னடைவா?

பொள்ளாச்சி வட்டாரத்தைக் கடந்து இந்தப் பிரச்சனையை எதிர்கட்சிகள் கொண்டு செல்வது அடிப்படையிலேயே மற்ற பகுதியில் அதிமுக கூட்டணிக்கு என்னவிதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைச் சொல்ல முடியும்.

ஆயினும் கொங்கு பகுதிகளில் பொள்ளாசி பாலியல் வன்முறை வழக்கில் அதிமுகவினர் கைது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது.