சிவகங்கை மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் தேர்தலிலும் அதிமுக வெற்றி!

 

சிவகங்கை மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் தேர்தலிலும் அதிமுக வெற்றி!

சிவகங்கை மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றிருந்த நிலையில், துணை தலைவர் தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.

சிவகங்கை மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் தேர்தலிலும் அதிமுக வெற்றி!

சிவகங்கை மாவட்டத்தின் 16 ஊராட்சி வார்டுகளுக்கான தேர்தல் கடந்த ஜனவரி மாதம் நடக்கவிருந்தது. பல்வேறு காரணங்களால் இந்த தேர்தல் தொடர்ந்து 4 முறையாக ஒத்திவைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று காலை ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடந்தது. அதில் திமுக சார்பில் செந்தில் என்பவரும் அதிமுக சார்பில் பொன்மணி பாஸ்கர் என்பவரும் போட்டியிட்ட நிலையில், பொன்மணி பாஸ்கர் குலுக்கல் முறையில் தேர்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில், 4 மணிக்கு துணை தலைவர் பதவிக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த தேர்தலில், அதிமுக சார்பில் சரஸ்வதி அண்ணா என்பவரும் திமுக சார்பில் சுந்தர்ராஜன் போட்டியிட்டனர். தேர்தல் முடிவில் திமுக மற்றும் அதிமுக தலா 8 வாக்குகள் பெற்றிருந்ததால் குலுக்கல் முறையில் துணை தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டது. அதன் படி, குலுக்கல் முறையில் தேர்தெடுக்கப்பட்ட அதிமுகவின் சரஸ்வதி அண்ணா வெற்றி பெற்றதாக ஆட்சியர் அறிவித்தார்.