அதிமுகவுடன் அமமுக கூட்டணியா? – என்ன சொல்கிறார் டிடிவி?

 

அதிமுகவுடன் அமமுக கூட்டணியா? – என்ன சொல்கிறார் டிடிவி?

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான பணியில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் நிலையில், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்று தனிக்கட்சியை உருவாக்கிய டிடிவி தினகரன் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளார். சசிகலா விடுதலை குறித்த பணிகளில் பிசியாக இருந்த தினகரன், சசிகலா தற்போது விடுதலையாகி சென்னைக்கு வந்திருப்பதால் முழு மூச்சாக தேர்தல் பணியில் இறங்கியுள்ளார்.

அதிமுகவுடன் அமமுக கூட்டணியா? – என்ன சொல்கிறார் டிடிவி?

அண்மையில் சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதிமுகவில் சசிகலாவை இணைப்பது குறித்து அதிமுக தலைமையிடம் ஆலோசனை நடத்தியதாக செய்திகள் வெளியாகின. இதனால், அதிமுகவுடன் அமமுக கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது. சசிகலா தலைமையில் அமமுக தேர்தலில் போட்டியிட்டால், அதிமுகவின் வாக்குகள் சிதறும் என்பது நிச்சயம். இதன் காரணமாக, சசிகலாவை அதிமுக மீண்டும் சேர்த்துக் கொள்ளும் என்றும் அதிமுக அமமுகவுடன் கூட்டணி அமைக்கும் என்றும் கூறப்பட்டது.

அதிமுகவுடன் அமமுக கூட்டணியா? – என்ன சொல்கிறார் டிடிவி?

இந்த நிலையில், சென்னை தி.நகர் இல்லத்தில் சசிகலாவை சந்தித்த டிடிவி தினகரன் அவருடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அதிமுக- அமமுக இணையும் என்ற யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது. திமுகவை ஆட்சியில் வராமல் தடுப்பது தான் ஒரே இலக்கு என்று தெரிவித்தார். மேலும், அமமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் என்றும் கூறினார். அமமுக தலைமையில் கூட்டணி என்றால், அதிமுகவுடன் இணைய வாய்ப்பில்லை என்பது தினகரனின் பேச்சின் மூலம் தெளிவாக தெரிகிறது.