மும்பையில் தொழிலதிபர்களை இன்று சந்திக்கும் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்.. மறைமுகமாக எச்சரித்த உத்தவ் தாக்கரே

மும்பையில் தொழிலதிபர்களை இன்று சந்திக்கும் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்.. மறைமுகமாக எச்சரித்த உத்தவ் தாக்கரே

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று மும்பையில் தொழிலதிபர்களை சந்தித்து பேச உள்ளார். இந்நிலையில் நேற்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, யோகி ஆதித்யநாத்துக்கு மறைமுகமாக எச்சரிக்கை செய்துள்ளார்.

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று மாலை மும்பை சென்றடைந்தார். யோகி ஆதித்யநாத் தனது மும்பை சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக தொழிலதிபர்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்களை சந்தித்து பேச உள்ளார். மாநிலத்தில் முதலீடு செய்வது தொடர்பாகவும், உ.பி.யில் உருவாகும் பிலிம் சிட்டி தொடர்பாகவும் அவர்களை சந்தித்து யோகி ஆதித்யநாத் ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யோகியின் வருகையால் தனது மாநிலத்திலிருந்து உத்தர பிரதேசத்துக்கு முதலீடுகள் போய் விடுமோ என்ற அச்சம் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

மும்பையில் தொழிலதிபர்களை இன்று சந்திக்கும் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்.. மறைமுகமாக எச்சரித்த உத்தவ் தாக்கரே
முதல்வர் உத்தவ் தாக்கரே

ஐ.எம்.சி. ஏற்பாடு செய்து இருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர் உத்தவ் தாக்கரே பேசுகையில் கூறியதாவது: யாராவது முன்னேறினால் நாங்கள் பொறாமைப்படுவதில்லை. ஒருவர் போட்டியிட்டால் ஒருவரின் முன்னேற்றத்தில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் நீங்கள் எதையும் வலுக்கட்டாயமாக எடுத்து செல்லப் போகிறீர்கள் என்றால், நான் நிச்சயமாக அதனை நடக்க விடமாட்டேன். நீங்களும் (தொழிலதிபர்கள்) செல்ல தயாராக இருக்க மாட்டீர்கள்.

மும்பையில் தொழிலதிபர்களை இன்று சந்திக்கும் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்.. மறைமுகமாக எச்சரித்த உத்தவ் தாக்கரே
பாலிவுட் நட்சத்திரங்கள்

சிலர் (யோகி ஆதித்யநாத்) இன்று வருகிறார்கள். அவர்கள் உங்கள் அனைவரையும் சந்தித்து உங்களை வரச் சொல்வார்கள் (முதலீடுகளுக்கு). ஆனால் அவர்களுக்கு (மகாராஷ்டிராவின்) காந்த சக்தி தெரியாது. இது மகிவும் சக்தி வாய்ந்தது, இங்கிருந்து அங்கு செல்லும் மக்களை (தொழிலதிபர்கள்) மறக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்தது. அங்கிருந்து யாரோ வருவர் இங்கு வருவதால் அது நடக்க கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.