எதிர்வரும் உத்தர பிரதேச தேர்தலில் பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மையான மக்கள் ஆதரவு.. கருத்து கணிப்பு தகவல்

 

எதிர்வரும் உத்தர பிரதேச தேர்தலில் பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மையான மக்கள் ஆதரவு.. கருத்து கணிப்பு தகவல்

டைம்ஸ் நவ் – சி வோட்டர் இணைந்து நடத்திய கருத்து கணிப்பில், எதிர்வரும் உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளிப்போம் என்று பெரும்பான்மையான மக்கள் தெரிவித்துள்ளனர்.

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசாங்கத்தின் ஆட்சி காலம் 2022 மார்ச் 14ம் தேதி முடிவடைகிறது. இதனால் அடுத்த ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாத காலத்தில் 403 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் டைம்ஸ் நவ்-சி வோட்டர் இணைந்து உத்தர பிரதேச மக்களிடம் ஒரு கருத்து கணிப்பை மேற்கொண்டது. அடுத்த சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு, விரும்பும் முதல்வர் வேட்பாளர், மோடியின் செயல்பாடு உள்பட பல்வேறு கேள்விகளுக்கு மக்கள் தங்களது கருத்தை தெரிவித்துள்ளனர். இந்த கருத்து கணிப்பில் பெரும்பாலான மக்கள் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் உத்தர பிரதேச தேர்தலில் பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மையான மக்கள் ஆதரவு.. கருத்து கணிப்பு தகவல்
சமாஜ்வாடி

எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் யாருக்கு ஆதரவு?
பா.ஜ.க. – 43.1 சதவீதம்
சமாஜ்வாடி – 29.6 சதவீதம்
பகுஜன் சமாஜ் – 10.1 சதவீதம்
காங்கிரஸ் – 8.1 சதவீதம்
மற்றவர்கள் – 3.2 சதவீதம்
தொங்கு சட்டப்பேரவை – 3.1 சதவீதம்
பதில் இல்லை – 2.8 சதவீதம்

எதிர்வரும் உத்தர பிரதேச தேர்தலில் பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மையான மக்கள் ஆதரவு.. கருத்து கணிப்பு தகவல்
முதல்வர் யோகி ஆதித்யநாத்

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத செயல்பாடு?
நன்று – 31.7 சதவீதம்
சராசரி – 23.4 சதவீதம்
மோசம் – 39.5 சதவீதம்

யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசு மீது கோபமா? அரசாங்கத்தின் செயல்பாடு மாற வேண்டுமா?
இல்லை – 23.4 சதவீதம்
ஆமாம், மாற வேண்டும் – 48.7 சதவீதம்
ஆமாம், மாற வேண்டாம் இல்லை – 27.9 சதவீதம்

எதிர்வரும் உத்தர பிரதேச தேர்தலில் பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மையான மக்கள் ஆதரவு.. கருத்து கணிப்பு தகவல்
அகிலேஷ் யாதவ்

அதிகம் விரும்பும் உத்தர பிரதேச முதல்வர் வேட்பாளர்?
யோகி ஆதித்யநாத் – 42.2 சதவீதம்
அகிலேஷ் யாதவ் – 32.2 சதவீதம்
மாயாவதி – 17 சதவீதம்
பிரியங்கா காந்தி – 2.9 சதவீதம்

எதிர்வரும் உத்தர பிரதேச தேர்தலில் பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மையான மக்கள் ஆதரவு.. கருத்து கணிப்பு தகவல்
பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடு?
நன்று – 44.7 சதவீதம்
சராசரி – 19.7 சதவீதம்
மோசம் – 35.6 சதவீதம்