அரசியல் லாபத்திற்காக விவசாயிகளை காங்கிரஸ் திசை திருப்புகிறது!

அரசியல் லாபத்திற்காக  விவசாயிகளை காங்கிரஸ் திசை திருப்புகிறது!

காங்கிரஸ் கட்சிக்கு விவசாயம் குறித்து எந்த அக்கறையும் இல்லை என வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விமர்சித்துள்ளார்.

அரசியல் லாபத்திற்காக  விவசாயிகளை காங்கிரஸ் திசை திருப்புகிறது!

வேளாண்துறையில் சீர்திருத்தம் என்ற பெயரில் மக்களவையில் நிறைவேறிய 3 மசோதாக்களுக்குக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இருப்பினும் எதிர்ப்பை மீறி இந்த மசோதாக்கள், மாநிலங்களவை மற்றும் மக்களவையில் நிறைவேறின.

அரசியல் லாபத்திற்காக  விவசாயிகளை காங்கிரஸ் திசை திருப்புகிறது!

இதனால் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவையிலிருந்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக்.ஓ.பிரையன், ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் உட்பட 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். விவசாய சட்டங்களுக்கு எதிராக வேளாண் சட்ட நகலை எரித்து நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது.

அரசியல் லாபத்திற்காக  விவசாயிகளை காங்கிரஸ் திசை திருப்புகிறது!

இந்நிலையில் மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், “அரசியல் லாபத்திற்காக நாட்டின் விவசாயிகளைக் காங்கிரஸ் கட்சி திசை திருப்புகிறது. விவசாயம் குறித்தோ, நாட்டின் பொருளாதாரம் குறித்தோ காங்கிரஸுக்கு எந்த அக்கறையும் இல்லை. விவசாயிகள் சுதந்திரமாக தங்கள் தொழிலை மேற்கொள்ள இந்த சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன” என்று கூறியுள்ளார்.