‘திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன் தள்ளுபடி’ – மு.க ஸ்டாலின் பேச்சு!

 

‘திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன் தள்ளுபடி’ – மு.க ஸ்டாலின் பேச்சு!

தமிழகம் முழுவதும் நாளை பொங்கல் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படவிருக்கிறது. பொங்கலையொட்டி, அனைத்து கட்சிகளும் குறிப்பிட்ட இடங்களில் சமத்துவ பொங்கல் விழா நடத்தி வருகின்றன. அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதியில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் சமத்துவ பொங்கல் விழா நடத்தினார். அந்த நிகழ்ச்சியில் ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.

‘திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன் தள்ளுபடி’ – மு.க ஸ்டாலின் பேச்சு!

அந்த நிகழ்ச்சியின் போது பேசிய மு.க ஸ்டாலின், ‘வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக வென்று ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும். ரூ.7 ஆயிரம் கோடி கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்தது திமுக ஆட்சி தான்’ என்று கூறினார். அண்மையில் ஈரோட்டில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசிய மு.க ஸ்டாலின், திமுக ஆட்சி அமைத்தவுடன் முதலில் கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என்றும் 100 நாட்கள் வேலை திட்டம் உயர்த்தப்படும் என தெரிவித்திருந்தார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே எஞ்சியுள்ளன. இதை எதிர்நோக்கி, பிரதான கட்சிகளான திமுகவும் அதிமுகவும் அதிரடியாக களத்தில் இறங்கி தமிழக மக்களுக்காக ஏக போக அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். அறிவிக்கப்படும் அனைத்தும் செயல்படுத்தப்படுமா? என அரசியல் நோக்கர்கள் விமர்சித்து வரும் நிலையில், ஸ்டாலின் விவசாயிகள் கடன் ரத்து செய்யப்படும் என்று கூறியிருக்கிறார்.