வேளாண் சட்டங்கள், விவசாயிகளுக்கு நன்மை தரும் – ஜி.கே.வாசன்

வேளாண் சட்டங்கள், விவசாயிகளுக்கு நன்மை தரும் – ஜி.கே.வாசன்

தமிழக எதிர்க்கட்சிகள் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் வேளாண் மசோதாக்களை கண்மூடித்தனமாக எதிர்த்து வருவதாக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் மறைந்த த.மா.கா விவசாய அணி மாநில தலைவர் புலியூர் நாகராஜனின் உருவ படத்தை ஜி.கே.வாசன் திறந்துவைத்தார்.

வேளாண் சட்டங்கள், விவசாயிகளுக்கு நன்மை தரும் – ஜி.கே.வாசன்

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை முழுமையாக பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை ஞாயிற்று கிழமைகளிலும் திறக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். மேலும்,

வேளாண் சட்டங்கள், விவசாயிகளுக்கு நன்மை தரும் – ஜி.கே.வாசன்

யூரியா தட்டுப்பாடு ஏற்படாத வகையில் அரசு அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறிய வாசன், தமிழக எதிர்க்கட்சிகள் கண்மூடித்தனமாக மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்ப்பதாகவும், ஆனால் இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு நன்மை பயக்க கூடியது என்றும் அவர் தெரிவித்தார். மேலும், சட்டமன்ற தேர்தலில் த.மா.கா தனி சின்னத்தில் போட்டியிடும் என்றும் அவர் கூறினார்.

வேளாண் சட்டங்கள், விவசாயிகளுக்கு நன்மை தரும் – ஜி.கே.வாசன்