வேளாண் சட்டங்களை திரும்பப்பெற இயலாது: மத்திய அரசு திட்டவட்டம்!

 

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற இயலாது: மத்திய அரசு திட்டவட்டம்!

மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 14ஆவது நாளாக இன்று விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து வரும் நிலையில், இன்று விவசாயிகளுடன் மத்திய அரசு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தியது. முன்னதாக நடந்த 5 கட்ட பேச்சுவார்த்தையின் போதும், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசு ஒப்புதல் வழங்காததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற இயலாது: மத்திய அரசு திட்டவட்டம்!

இந்த நிலையில், எக்காரணத்தைக் கொண்டும் வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்ட மாட்டாது என்றும் வேண்டுமானால் சில திருத்தங்களை மேற்கொள்ள தயாராக இருக்கிறோம் என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகிறது.

அதற்கு சட்டத்திருத்தம் வேண்டாம் என திட்டவட்டமாக தெரிவித்த விவசாயிகள் தரப்பு, திரும்ப திரும்ப ஒரே விஷயத்தை மத்திய அரசு கூறுவதாக தெரிவித்துள்ளனர். இன்னும் சிறிது நேரத்தில் 6ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கவிருக்கும் சூழலில், மத்திய அரசு இவ்வாறு தெரிவித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.