வேளாண் சட்டம்: முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியது ஏன்?

 

வேளாண் சட்டம்: முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியது ஏன்?

மத்தியில் ஆளும் பாஜக ஆட்சி வேளாண் சட்டங்கள் 3 –யை அவசரம் அவசரமாகக் கொண்டு வந்தது. 15 நாட்களில் இது நடைமுறைக்கு வரும் அளவுக்கு வேகம் இருந்தது.

இந்தச் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானாவில் போராட்டம் வெடித்தது. ஆனால், மத்திய அரசு அவற்றைக் கண்டுகொள்ள வில்லை. விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வில்லை. அதனால், லட்சக்கணக்கான விவசாயிகள் ஒன்று திரண்டு டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாயிகள் போராட்டம் ஒரு மாதம் கடந்தும் நீடித்து வருகிறது. 4 முறை மத்திய அரசு விவசாயிகளுடன் போராட்டம் நடத்தியும் சுமூகத் தீர்வு ஏற்பட வில்லை. விவசாயிகள் ஒரே தீர்வாக 3 சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறார்கள்.

வேளாண் சட்டம்: முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியது ஏன்?

கேரளா உள்ளிட்ட பல மாநிலங்கள் வேளான் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் இயற்றி வருகின்றன. ஆனால், தமிழ்நாட்டில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த வேளான் சட்டங்களுக்கு முழு ஆதரவு அளித்து வருகிறார். விவசாயிகளுக்கும் நல்லது செய்யவே இந்தச் சட்டங்கள் என அடித்துக்கூறுகிறார்.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற ஏதுவாக பேரவையின் சிறப்பு கூட்டத்தைக் கூட்டவேண்டும். பஞ்சாப் மாநிலத்தை தொடர்ந்து கேரளாவிலும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டியுள்ள ஸ்டாலின் தமிழகத்திலும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டம் இயற்றவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

வேளாண் சட்டம்: முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியது ஏன்?

தமிழக அரசு இந்தச் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் இயற்றாது என்று தெரிந்தும் ஸ்டாலின் கடிதம் எழுதியது எதற்காக என்று பலரும் நினைக்கிறார்கள்.

கடந்த சில மாதங்களாகவே ஒரு நடைமுறை இருக்கிறது. அதாவது 7.5 சதவிகித இடஒதுக்கீடு தொடர்பாக கவர்னரிடம் அரசு வலியுறுத்தினாலும், திமுக தலைவர் நேரில் சென்றவுடனே மாற்றம் ஏற்பட்டது. அதையே திமுக பிடித்துக்கொண்டு எங்களால்தான் இந்தச் சட்டம் நிறைவேறியது என்றது.

இப்போது விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாட்டிலும் மக்கள் போராட முன்வருகின்றன. இன்னும் ஓரிரு வாரத்தில் விவசாயிகள் போராட்டத்தால் தமிழக அரசு முடிவு மாறினால் அதற்கு தாங்களே காரணம் என்பதற்காகவே இந்தக் கடிதம் எழுதப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.