வேளாண் சட்ட விவகாரம் : கோர்ட்டின் தீர்ப்புக்கு மத்திய அரசு கட்டுப்படும்!

 

வேளாண் சட்ட விவகாரம் : கோர்ட்டின் தீர்ப்புக்கு மத்திய அரசு கட்டுப்படும்!

சர்ச்சைக்குரிய வேளாண் சட்ட விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மத்திய அரசு கட்டுப்படும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் 50 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வந்த போராட்டம், குடியரசு தினத்தன்று திசைமாறிப்போனது. விவசாயிகளின் பல நாட்கள் போராட்டம், கலவரத்தால் முடிவுக்கு வந்தது. அன்று போலீசார் அறிவுறுத்தலை மீறி மாற்று வழியில் பேரணி நடத்தியதோடு குடியரசு தின விழாவின் போதே டெல்லிக்குள் விவசாயிகள் நுழைந்ததாக குற்றஞ்சாட்டிய போலீசார், விவசாயிகள் மீது தடியடி நடத்தி விரட்ட முயன்றனர்.

வேளாண் சட்ட விவகாரம் : கோர்ட்டின் தீர்ப்புக்கு மத்திய அரசு கட்டுப்படும்!

சினங்கொண்ட விவசாயிகள் பதிலுக்கு போலீசாரை தாக்கி, தடையை மீறி செங்கோட்டைக்குள் நுழைந்தனர். இதனால் டெல்லியில் பெரும் பதற்றம் நிலவியது. டெல்லியில் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் விவசாயிகள் இல்லை என அறிவித்த பாரதிய கிசான் சங்கம், வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை திரும்பப் பெறுவதாக அறிவித்தது. மேலும், வேறு வழியில் போராட்டம் தொடரும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தது.

வேளாண் சட்ட விவகாரம் : கோர்ட்டின் தீர்ப்புக்கு மத்திய அரசு கட்டுப்படும்!

இந்த நிலையில் வேளாண் சட்டங்கள் குறித்து இன்று நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பேசிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சர்ச்சைக்குரிய சட்ட விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மத்திய அரசு கட்டுப்படும் என்று தெரிவித்தார். மேலும், விவசாயிகள் தங்களது விளை பொருட்களுக்கு உரிய விலையை உறுதி செய்வதே அரசின் கொள்கை என்று கூறிய அவர், சட்டங்களை நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்று பிறகே மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது என்றும் மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் தொடர்பாக தவறான தகவல்களை நீக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.