நாகர்கோவிலில் ரயிலில் அடிபட்டு சுமை தூக்கும் தொழிலாளி பலி!

 

நாகர்கோவிலில் ரயிலில் அடிபட்டு சுமை தூக்கும் தொழிலாளி பலி!

கன்னியாகுமரி

நாகர்கோவில் அருகே ரயிலில் அடிபட்டு சுமை தூக்கும் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையம் அருகே இன்று காலை இளைஞர் ஒருவர் ரயிலில் அடிபட்டு சடலமாக கிடந்தார். இதனை கண்ட அந்த பகுதி பொதுமக்கள், நாகர்கோவில் ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

அதன் பேரில் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

நாகர்கோவிலில் ரயிலில் அடிபட்டு சுமை தூக்கும் தொழிலாளி பலி!

அதில், உயிரிழந்த நபர் அருகுவிளை பகுதியை சேர்ந்த பிரான்சிஸ் என்பவரது மகன் அணிஷ் (24) என்பதும், அவர் பள்ளிவிளை பகுதியில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.

இந்த நிலையில, அணிஷ் தண்டவாளத்தை கடக்கும்போது ரயில் மோதி உயிரிழந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.