மாநிலங்களவையிலும் நிறைவேறியது வேளாண் மசோதாக்கள்; அவை ஒத்திவைப்பு!

 

மாநிலங்களவையிலும் நிறைவேறியது வேளாண் மசோதாக்கள்; அவை ஒத்திவைப்பு!

மத்திய அரசு தாக்கல் செய்த 2 வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையிலும் நிறைவேறியது.

மத்திய அரசு கொண்டு வந்த விவசாய விளைபொருட்கள் ஏற்றம் மற்றும் பண்ணை சேவைகள், விவசாய உற்பத்தி பொருட்கலின் விற்பனை உள்ளிட்ட 3 மசோதாக்கள் கடும் எதிர்ப்புகளுக்கிடையே மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதே போல, பாஜக கூட்டணியில் இருந்த சிரோன்மணி அகாலிதளம் கட்சியும் இந்த மசோதாக்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

மாநிலங்களவையிலும் நிறைவேறியது வேளாண் மசோதாக்கள்; அவை ஒத்திவைப்பு!

இதனையடுத்து, இன்று காலை கூடிய மாநிலங்களவையில் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் 3 மசோதாக்களையும் தாக்கல் செய்தார். அதன் பிறகு பேசிய அவர், விவசாயிகளின் நலனுக்காகவே இந்த மசோதாக்கள் சட்டமாக இயற்றப்பட உள்ளதாக கூறினார். இன்றும் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், விதிமுறை புத்தகங்களை கிழித்தெறிந்து மைக்கை உடைக்க முயற்சி செய்து அமளியில் ஈடுபட்டதோடு, மசோதாக்களுக்கு எதிரான பல்வேறு கருத்துக்களை முன்வைத்தனர்.

மாநிலங்களவையிலும் நிறைவேறியது வேளாண் மசோதாக்கள்; அவை ஒத்திவைப்பு!

ஆனால், எதிர்க்கட்சிகளின் கருத்துக்களை அவைத்தலைவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி மக்களவையில் நிறைவேறிய 2 மசோதாக்கள் மாநிலங்களவையிலும் குரல் வாக்கெடுப்பின் வாயிலாக நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர், அவை நாளை காலை 9 மணி வரை ஒத்திவைக்கப் படுவதாக அவைத்தலைவர் அறிவித்தார்.