கடும் எதிர்ப்புகளுக்கிடையே விவசாய மசோதாக்கள் மாநிலங்களவையில் தாக்கல்!

 

கடும் எதிர்ப்புகளுக்கிடையே விவசாய மசோதாக்கள் மாநிலங்களவையில் தாக்கல்!

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வேளாண்துறை சம்பந்தமான 3 மசோதாக்களை மத்திய அரசு நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பாஜக கூட்டணியில் இருக்கும் சிரோன்மணி அகாலிதளம் கட்சியும் இந்த மசோதாக்களுக்கு எதிராக மக்களவையில் வாக்களித்தது. அதுமட்டுமில்லாது, மத்திய உணவுப்பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்து எதிர்ப்பை தெரிவித்தார்.

கடும் எதிர்ப்புகளுக்கிடையே விவசாய மசோதாக்கள் மாநிலங்களவையில் தாக்கல்!

விவசாயிகளின் நலனுக்கு எதிராக இருப்பதாக கூறப்படும் இந்த மசோதா, இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படவிருந்ததால் பாஜக எம்.பிக்கள் எல்லாரும் தவறாமல் அவைக்கு வர வேண்டும் என பாஜக கொறடா உத்தரவிட்டார். இந்த மசோதா நிறைவேறுவதற்கு 122 எம்.பிக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், பாஜகவுக்கு 135 எம்.பிக்களின் ஆதரவு இருப்பதால் இந்த சட்டமசோதாக்கள் நிறைவேறும் என பாஜக நம்பிக்கையுடன் இருக்கிறது.

கடும் எதிர்ப்புகளுக்கிடையே விவசாய மசோதாக்கள் மாநிலங்களவையில் தாக்கல்!

இந்த நிலையில், இன்று கூடியிருக்கும் மாநிலங்களவையில் வேளாண் துறை சம்பந்தமான 3 வேளாண் மசோதாக்களையும் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் தாக்கல் செய்துள்ளார். இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசு அறிவித்த இந்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.