கொரோனா காலத்தில் 32 புதிய தொழில் தொடங்க ஒப்பந்தம்… 69,712 வேலை வாய்ப்பு உருவாக்கம்! – எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

கொரோனா காலத்தில் 32 புதிய தொழில் தொடங்க ஒப்பந்தம்… 69,712 வேலை வாய்ப்பு உருவாக்கம்! – எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

கொரோனா காலத்திலும் தமிழகத்தில் 32 புதிய தொழில் தொடங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, 32,464 கோடிக்கு முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 69,712 புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

கொரோனா காலத்தில் 32 புதிய தொழில் தொடங்க ஒப்பந்தம்… 69,712 வேலை வாய்ப்பு உருவாக்கம்! – எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

ஊரடங்கு, கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசும்போது, “அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கோவிட் நோய் சிகிச்சை குறித்த நிலையான வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்பதை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். கோவிட் சிறப்பு மையங்கள் சிறப்பாக செயல்படுகின்றன. அம்மையங்கள் பொதுமக்களுக்கு மேலும் சிறப்பான சேவைகளை வழங்க, உணவு, குடிநீர், கழிப்பிட வசதிகளை அவ்வப்போது மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.

கொரோனா காலத்தில் 32 புதிய தொழில் தொடங்க ஒப்பந்தம்… 69,712 வேலை வாய்ப்பு உருவாக்கம்! – எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

தமிழ்நாடு குறைவான இறப்பு விகிதத்தைக் கொண்டு இருந்த போதிலும், இறப்பு விகிதத்தை மேலும் குறைக்கும் விதமாக மாவட்ட ஆட்சித் தலைவர்கள், சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.
வேளாண் தொழிலுக்கு மட்டும் விலக்களித்து, முதலில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால், ஏழைகள், சிறு தொழில் செய்வோர், சிறு வணிகம் செய்வோர் போன்றோரின்

கொரோனா காலத்தில் 32 புதிய தொழில் தொடங்க ஒப்பந்தம்… 69,712 வேலை வாய்ப்பு உருவாக்கம்! – எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

பொருளாதார நிலை பாதிக்கப்படும் என்பதை அறிந்து, அவர்களை பாதுகாக்க தமிழ்நாட்டில் உணவுப் பொருட்களை விலையின்றி வழங்குதல், ரொக்க நிவாரணம் வழங்குதல் போன்ற பல்வேறு நிவாரண நடவடிக்கைகளை தமிழ்நாடு முழுவதும் தமிழக அரசு, மிகுந்த அக்கறையுடன் செயல்படுத்தியது. பின்னர், படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருவதை நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள். அதுமட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேலும் மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. கொரோனா காலத்தில் கூட, இதுவரை 42 புதிய தொழில் திட்டங்கள் தமிழ்நாட்டில் துவங்குவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இதன் மூலம், சுமார் 31,464 கோடி ரூபாய் முதலீடும், சுமார் 69,712 புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட உள்ளன.
இந்நடவடிக்கைகளால், ஏப்ரல் முதல் ஜூன் 2020 காலங்களில் அதிக புதிய

கொரோனா காலத்தில் 32 புதிய தொழில் தொடங்க ஒப்பந்தம்… 69,712 வேலை வாய்ப்பு உருவாக்கம்! – எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

முதலீடுகளை ஈர்த்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கியதில், இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்பதை ஒரு தனியார் நிறுவன ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் கீழ், ஊரக தொழில்களை மேம்படுத்தவும், வருமானத்தைப் பெருக்கவும், 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 1,40,000 பயனாளிகள் பயன்பெறும் வகையில் கொரோனா சிறப்பு நிதி உதவி தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இக்கொரானா காலகட்டத்தில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை, 1,53,576 சுய உதவிக் குழுக்களுக்கு, 5,934 கோடி ரூபாய் வங்கி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. இதில் தனியே கொரோனா நோய்த் தொற்று காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 67,354 சுய உதவிக் குழுக்களுக்கு சுமார் 720 கோடி ரூபாய் அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், வருமானத்தைப் பெருக்கவும் கடனாக வழங்கப்பட்டுள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்புகளை களைய 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கோவிட் நிவாரணம் மற்றும் மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா காலத்தில் 32 புதிய தொழில் தொடங்க ஒப்பந்தம்… 69,712 வேலை வாய்ப்பு உருவாக்கம்! – எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

எனது தலைமையில் மாநில மற்றும் மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் கூட்டங்கள் நடத்தி, உடனுக்குடன் தொழில் நிறுவனங்களுக்குக் கடன்களை வழங்க அறிவுறுத்தியதினால், மத்திய அரசின் கடன் திட்டத்தில் மிக அதிக அளவில், அதாவது சுமார் 7,518 கோடி ரூபாய்க்கான ஒப்புதலினை பெற்று இந்தியாவில், தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது.
தமிழக அரசு எடுத்த சிறப்பான நடவடிக்கைகளால், அரசின் நலத்திட்டங்கள் மக்களை பெருமளவில் சென்று சேர்ந்து, மக்களைப் பொருளாதார பாதிப்பில் இருந்து பாதுகாத்தன எனவும், வேலைவாய்ப்பின்மை இரண்டே மாதங்களில், ஆறில் ஒரு பங்காக சரிந்துள்ளது எனவும், தனி நபர் வருவாய் படிப்படியாய் உயர்ந்து கொரோனா சூழலால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பிலிருந்து தமிழ்நாடு விரைந்து மீண்டு வருகிறது எனவும் ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன” என்றார்