கத்திரி வெயில் ஆரம்பம் …வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

 

கத்திரி வெயில் ஆரம்பம் …வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் கத்திரி வெயில் தொடங்கி இருப்பதால் கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கத்திரி வெயில் ஆரம்பம் …வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேலம், ஈரோடு ,தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் . நாளை மற்றும் நாளை மறுநாள் கன்னியாகுமரி ,திருநெல்வேலி ,தென்காசி ,தர்மபுரி ,ஈரோடு ,கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் ,ராணிப்பேட்டை மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்திரி வெயில் ஆரம்பம் …வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

வருகின்ற 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் உள் மாவட்டங்களில் ஒரு இடங்களிலும் தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் காற்றின் ஈரப்பதம் 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதால் காற்றின் இயல்பான வெப்பநிலையானது நான்கு முதல் ஐந்து டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உணரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.