“பாலியல் வாழ்க்கைக்கு வயது ஒரு தடையில்லை!” – 72 வயது முதியவரை திருமணம் செய்ய காத்திருக்கும் 27 வயது இளம் தாய்

 

“பாலியல் வாழ்க்கைக்கு வயது ஒரு தடையில்லை!” – 72 வயது முதியவரை திருமணம் செய்ய காத்திருக்கும் 27 வயது இளம் தாய்

நியூயார்க்: அமெரிக்காவில் 27 வயது இளம் தாய் 72 வயது முதியவரை திருமணம் செய்ய காத்திருக்கிறார்.

அமெரிக்காவில் ரேச்சல் செனட் என்ற 27 வயது இளம் வயது தாய் ஜான் பென்சிரா என்ற 72 வயது முதியவரை காதலித்து வருகிறார். இவர்களுக்கு இடையில் 45 வயது இடைவெளி உள்ளது. குறிப்பாக ரேச்சல் செனட்டின் பெற்றோரை விடவும் ஜான் பென்சிராவுக்கு வயது அதிகமாகும். ஆனால் தங்களுக்கிடையே வயது ஒரு தடையாக இருந்தது இல்லை எனவும், தங்களின் பாலியல் வாழ்க்கை தனித்துவமானது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பாதுகாப்பு நிறுவனம் ஒன்றில் ஜான் பென்சிரா காவலராக பணிபுரிந்தபோது அவருடன் பழகி தங்களுக்குள் காதல் வந்ததாகவும், க்ளப் ஒன்றில் தங்கள் காதலை வெளிப்படுத்திக் கொண்டதாகவும் ரேச்சல் செனட் தெரிவித்துள்ளார்.

“பாலியல் வாழ்க்கைக்கு வயது ஒரு தடையில்லை!” – 72 வயது முதியவரை திருமணம் செய்ய காத்திருக்கும் 27 வயது இளம் தாய்

ஜான் பென்சிரா தன்னுடைய விவகாரத்துக்காக இரண்டு ஆண்டுகளாக காத்திருந்தார். மேலும் அவருடைய 28 வயது மகனும் மற்றும் 23 வயது மகளும் இவர்களின் காதல் குறித்து அறிந்து மகிழ்ச்சியடைந்துள்ளனர். எனினும் ரேச்சல் செனட்டின் குடும்பத்தினர் இவர்களின் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆனால் ஜான் பென்சிராவை நேரில் சந்தித்து பேசிய பிறகு ரேச்சலின் குடும்பத்தினருக்கும் அவரை பிடித்து விட்டது. இந்த தம்பதி விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். கொரோனா பரவல் பிரச்சனைகளால் இவர்களின் திருமணம் தேதி முடிவு செய்யப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.