மீண்டும் லாக்டவுனா? – சென்னை மாநகராட்சி ஆணையர் விளக்கம்!

 

மீண்டும் லாக்டவுனா? – சென்னை மாநகராட்சி ஆணையர் விளக்கம்!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. நாளொன்றுக்கு 10 ஆயிரம் வரையிலேயே இருந்து வந்த பாதிப்பு 25 ஆயிரத்தை எட்டியிருக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் பாதிப்பு அதிகரிப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமே தெரிவித்திருக்கிறது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பிரச்சாரம், கட்சி கூட்டங்கள் அதிகளவில் நடைபெறுவதால் சமூக இடைவெளி காற்றில் பறக்க விடப்பட்டு, கொரோனா வைரஸ் மீண்டும் உருவெடுக்க வழிவகுத்திருக்கிறது.

மீண்டும் லாக்டவுனா? – சென்னை மாநகராட்சி ஆணையர் விளக்கம்!

பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்ததால், தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் மாவட்ட ஆட்சியர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். கூட்டத்தின் முடிவில், பொது இடங்களில் மாஸ்க் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்ற அதிரடி உத்தரவை பிறப்பித்தார். சமூக இடைவெளியும் முறையாக பின்பற்றப்பட வேண்டுமென ராஜீவ் ரஞ்சன் சுகாதாரத்துறைக்கு அறிவுறுத்தினார். இதனிடையே, கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதால் மீண்டும் லாக் டவுன் அமல்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன.

மீண்டும் லாக்டவுனா? – சென்னை மாநகராட்சி ஆணையர் விளக்கம்!

இந்த நிலையில், தமிழகத்தில் மீண்டும் லாக்டவுன் போடப்படுமா? என்ற கேள்விக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களிடம் பதிலளித்தார். லாக்டவுன் போடப்படும் என்ற தகவலில் உண்மையில்லை என விளக்கமளித்த அவர், சென்னை தேர்தல் பணியில் உள்ள 30 ஆயிரம் பேரில் 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.