மக்களைக் காக்க மீண்டும் பொது முடக்கம்? – அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கும் எடப்பாடி பழனிசாமி

 

மக்களைக் காக்க மீண்டும் பொது முடக்கம்? – அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கும் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் மாநிலம் முழுக்க முழு ஊரடங்கு கொண்டுவரும் முடிவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளதாக அ.தி.மு.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தது. இதைக் கட்டுப்படுத்த சென்னைக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால், சென்னையில் இருந்த பலரும் சொந்த ஊர் திரும்பினர். தற்போது சென்னையில் கொரோனா பாதிப்பு 1200 என்ற அளவில் குறைந்துள்ளது. ஆனால், மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஒரு நாளைக்கு நான்காயிரத்துக்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் கண்டறியப்படுகின்றனர். இதைத் தடுக்க அந்த அந்த மாவட்டம், நகராட்சி அளவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வருகிறது.

மக்களைக் காக்க மீண்டும் பொது முடக்கம்? – அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கும் எடப்பாடி பழனிசாமிசென்னையில் தற்போது தளர்வு அளிக்கப்பட்டுள்ளதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அதே நேரத்தில் தினமும் 1200 பேர் என்ற அளவில் சென்னையில் கொரோனா நோயாளிகள் கண்டறியப்படுகின்றனர். இதே நிலை நீடித்தால் இன்னும் சில நாட்களில் சென்னையிலும் மீண்டும் கொரோனா தாக்கம் அதிரித்துவிடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

மக்களைக் காக்க மீண்டும் பொது முடக்கம்? – அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கும் எடப்பாடி பழனிசாமிஎனவே, தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கை கொண்டு வந்து, பரிசோதனைகளை அதிகப்படுத்தி, சந்தேகத்துக்கு உரியவர்களைத் தனிமைப்படுத்தினால் கொரோனாவைக் கட்டுப்படுத்தலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கொரோனாவைக் குறைக்க இது மட்டுமே வழி என்று நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளதால் தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கை கொண்டுவர தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இன்று மாலை நடைபெற உள்ள தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டு முடிவெடுக்கப்படும். இன்னும் ஒரு சில தினங்களில் ஊரடங்கு அறிவிக்கப்படும் என்று தலைமைச் செயலகம் மற்றும் அ.தி.மு.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மக்களைக் காக்க மீண்டும் பொது முடக்கம்? – அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கும் எடப்பாடி பழனிசாமிமதுரை மாவட்டத்தில் முழு ஊரடங்கு இன்றுடன் முடிவடைகிறது. அங்கு நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இன்னும் சில வாரங்களுக்கு முழு ஊரடங்கு தேவை என்று கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்து இந்த மாத இறுதி வரை நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, அமைச்சரவைக் கூட்டத்தில் முழு ஊரடங்கு முடிவு எடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மக்கள் பதற்றம் அடையாமல் தங்கள் வீடுகளிலேயே இருக்க உறுதியான நடவடிக்கை எடுத்தால் முழு ஊரடங்கு வெற்றி பெறும், கொரோனா பாதிப்பு நீங்கும். ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கிவிட்டு, மின்சாரத்தில் பணத்தை எடுத்துவிட்டதாக மக்கள் கருதுகின்றனர். அதுபோன்று மீண்டும் நிகழாமல் தடுத்தால் மீண்டும் மீண்டும் ஊரடங்கு கொண்டுவருவதற்கான தேவை இருக்காது என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.