மேற்கு வங்கம்: சன்னி லியோனைத் தொடர்ந்து கல்லூரி தகுதி பட்டியலில் இடம் பிடித்த சின் சான்!

 

மேற்கு வங்கம்: சன்னி லியோனைத் தொடர்ந்து கல்லூரி தகுதி பட்டியலில் இடம் பிடித்த சின் சான்!


மேற்கு வங்க கல்லூரி மாணவர் சேர்க்கை பட்டியலில் சன்னி லியோனைத் தொடர்ந்து ஜப்பான் கார்ட்டூன் கதாபாத்திரமான சின் சான் பெயர் இடம் பெற்றிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கம்: சன்னி லியோனைத் தொடர்ந்து கல்லூரி தகுதி பட்டியலில் இடம் பிடித்த சின் சான்!


கொரோனா பாதிப்பு காரணமாக மாணவர் சேர்க்கை ஆன்லைனில் நடந்து வருகிறது. முன்பு விண்ணப்பங்கள் வாங்கி நேரடியாக வழங்குவார்கள். தற்போது ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது போலியான மதிப்பெண் பட்டியல் தயாரித்து, பிரபல நடிககைள் பெயரில் விண்ணப்பித்து குழப்பம் ஏற்படுத்துவதாக புகார் வந்துள்ளது. இப்போது பிரபல கார்ட்டூன் கதாபாத்திரத்தின் பெயரில் எல்லாம் விண்ணப்பித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் உள்ள கல்லூரியில் பி.எஸ்சி (ஹானர்ஸ்) மாணவர் சேர்க்கைக்கான மெரிட் லிஸ்ட் வெளியிடப்பட்டது. இதில், பிரபல கார்ட்டூன் கதாபாத்திரமான சின் சான் பெயர் இடம் பெற்றுள்ளதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கல்லூரி நிர்வாகத்துக்கு பலரும் புகார் அளிக்கவே, உடனடியாக கல்லூரி இணையதளத்தில் வெளியான மெரிட் லிஸ்டில் இருந்து சின் சான் பெயர் நீக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசிலும் புகார் செய்யப்பட்டுள்ளது என்று கல்லூரி நிர்வாகி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கம்: சன்னி லியோனைத் தொடர்ந்து கல்லூரி தகுதி பட்டியலில் இடம் பிடித்த சின் சான்!


கல்லூரியின் மாணவர் சேர்க்கை மெரிட் லிஸ்டை தயாரிக்கும் பணியைத் தனியார் நிறுவனம் ஒன்றிடம் வழங்கியிருந்ததாக கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சரியாக பரிசீலனை செய்யாமல் ஆன்லைனில் வந்த தகவலை சரி பார்க்காமல் பட்டியலை வெளியிட்டுவிட்டதாக கூறப்படுகிறது. மெரிட் லிஸ்ட் வெளியாகி இருந்தாலும் சேர்க்கைக்கு முன்பு மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் உள்ளிட்டவை சரி பார்த்தபிறகே சேர்க்கப்படுவார்கள் என்றும் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பு வேறு ஒரு கல்லூரி பி.ஏ (ஹானர்ஸ்) ஆங்கிலம் சேர்க்கைக்கான மெரிட் லிஸ்டில் பின்னணி பாடகி நேஹா காக்கர் பெயரும், மூன்று கல்லூரிகளின் மெரிட் லிஸ்டில் சன்னி லியோன் பெயரும் இடம் பெற்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவங்கள் தொடர்பாக கல்லூரி நிர்வாகங்கள் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.