வெளியேறிய கூட்டணி கட்சிகள்…. பஸ்வான் மறைவு.. மோடியின் கேபினட் அமைச்சர்களின் எண்ணிக்கை 21ஆக குறைந்தது

 

வெளியேறிய கூட்டணி கட்சிகள்…. பஸ்வான் மறைவு.. மோடியின் கேபினட் அமைச்சர்களின் எண்ணிக்கை 21ஆக குறைந்தது

வெளியேறிய சிவ சேனா, சிரோன்மணி அகாலி தளம் மற்றும் ராம் விலாஸ் பஸ்வான் மறைவை தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கத்தில் கேபினட் அமைச்சர்களின் எண்ணிக்கை 21ஆக குறைந்துள்ளது.

2019 நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று தொடர்ந்து 2வது முறையாக பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தது. சிரோன்மணி அகாலிதளம், சிவ சேனா, இந்திய குடியரசு கட்சி, லோக் ஜன்சகதி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்று இருந்தன. 2019 மே 30ம் தேதியன்று பிரதமர் மோடி தவிர, 24 மத்திய அமைச்சரவை அமைச்சர்கள் உள்பட மொத்தம் 57 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றவர்களில் சாவந்த் (சிவ சேனா), பாதல் (சிரோன்மனி) மற்றும் பஸ்வான் (லோக் ஜன்சக்தி) ஆகியோரும் அடங்குவர்.

வெளியேறிய கூட்டணி கட்சிகள்…. பஸ்வான் மறைவு.. மோடியின் கேபினட் அமைச்சர்களின் எண்ணிக்கை 21ஆக குறைந்தது
ஹர்சிம்ரத் கவுர் பாதல்

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு இறுதியில் சிவ சேனா தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறியது. இதனையடுத்து மத்திய அமைச்சர் பதவியை அரவிந்த் சாவந்த் ராஜினாமா செய்தார். அண்மையில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹர்சிம்ரத் கவுர் பாதல் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் அவரது கட்சியும் (சிரோன்மணி அகாலி தளம்) தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறியது.

வெளியேறிய கூட்டணி கட்சிகள்…. பஸ்வான் மறைவு.. மோடியின் கேபினட் அமைச்சர்களின் எண்ணிக்கை 21ஆக குறைந்தது
ராம் விலாஸ் பஸ்வான்

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் லோக் ஜன்சக்தி கட்சி நிறுவனரும், மத்திய அமைச்சருமான ராம் விலாஸ் பஸ்வான் உடல் நலக்குறைவால் காலமானார். இதனையடுத்து பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அமைச்சர்களின் எண்ணிக்கை 24லிருந்து 21ஆக குறைந்துள்ளது. மேலும் ராம்தாஸ் அதவாலே மட்டும்தான் தற்போது மோடி அரசில் இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த ஒரே ஒரு கூட்டணி கட்சி அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது. ரயில்வே துறை இணையமைச்சர் சுரேஷ் அங்காடி அண்மையில் மறைந்ததையடுத்து மத்திய இணையமைச்சர்களின் எண்ணிக்கை 23ஆக குறைந்துள்ளது.