மத்திய அமைச்சர் சதானந்த கவுடா தனிமைப்படுத்தலுக்கு ஒத்துழைக்க மறுத்ததால் சர்ச்சை

 

மத்திய அமைச்சர் சதானந்த கவுடா தனிமைப்படுத்தலுக்கு ஒத்துழைக்க மறுத்ததால் சர்ச்சை

பெங்களூரு: மத்திய அமைச்சர் சதானந்த கவுடா தனிமைப்படுத்தலுக்கு ஒத்துழைக்க மறுத்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

அரசுப் பயணமாக டெல்லி சென்று விட்டு நேற்று விமானம் மூலம் பெங்களூருக்கு வந்த மத்திய வேதியியல் மற்றும் உரங்களுக்கான அமைச்சர் சதானந்த கவுடா, தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் வேறு ஒரு வேலைக்காக சென்று விட்டார். அமைச்சர்களுக்கு இந்த விஷயத்தில் விலக்கு இருப்பதாக கூறிய அவர் தனது செயலை நியாயப்படுத்தினார்.

அத்தியாவசியத் துறையான மருந்துகளின் பொறுப்பாளராக, தான் இருப்பதால் விலக்கு அளிக்கப்பட்ட பிரிவின் கீழ் பெங்களூரு வந்ததாக கூறினார்.

மத்திய அமைச்சர் சதானந்த கவுடா தனிமைப்படுத்தலுக்கு ஒத்துழைக்க மறுத்ததால் சர்ச்சை

இதுகுறித்து அவர் பேசுகையில், “நடைமுறையில் இத்தகைய வழிகாட்டுதல்கள் ஒவ்வொரு குடிமகனுக்கும் பொருந்தும். நான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால் பொறுப்பான பதவிகளை வகிப்பவர்களுக்கு தனிமைப்படுத்தப்படுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள். மேலும் என்னிடம் ஆரோக்யா சேது பயன்பாடு உள்ளது. அதில் நான் பாதுகாப்பாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. டெல்லியில் அலுவலகத்தில் கலந்து கொண்டபோது ஒவ்வொரு 3-4 நாட்களுக்கு ஒரு முறை எய்ம்ஸ் மருத்துவர்கள் என்னை பரிசோதித்தனர்” என்றார்.

மேலும் சதானந்த கவுடா கூறியதற்கு வலுசேர்க்கும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசு அமைச்சர்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வரும் அரசு அதிகாரிகளுக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக கர்நாடக அரசு நேற்று அறிவித்தது. ஆனால் சமூக வலைதளங்களில் மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவின் இந்த செயலுக்காக அதிகமாக மக்களால் விமர்சிக்கப்பட்டார்.