• August
    24
    Saturday

Main Area

Main



இரண்டு அவித்த முட்டை விலை ரூ.1,700 : அதிர்ச்சி தந்த ஹோட்டல் நிர்வாகம்!

முட்டை
முட்டை
Loading...

மும்பை: இரண்டு அவித்த முட்டைகளுக்கு ஹோட்டல் ஒன்றில்  ரூ.1700 கட்டணம் வசூலித்துள்ளதுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மும்பையில் உள்ள ஃபோர் சீசன்  என்ற ஹோட்டலில் கார்த்தி தார் என்பவர் அவித்த முட்டை,ஆம்லெட், கூல்டிரிங்ஸ்  உள்ளிட்ட உணவு பொருட்களைச் சாப்பிட்டார். இதையடுத்து அவர் சாப்பிட்ட  பொருட்களுக்கு ஹோட்டல் நிர்வாகம் பில் கொடுத்துள்ளது. அதில் 2 அவித்த முட்டைகளுக்கு ரூ.1700 ரூபாயும், 1 ஆம்லெட்டுக்கு ரூ.850 ரூபாயும் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. 

 

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில்,   ‘2 முட்டையின் விலை ரூ.1700. பணக்கார கோழியாக இருக்கும் போல’ என்று பதிவிட்டுள்ளார். இதைக் கண்ட நெட்டிசன்கள் ஹோட்டல் நிர்வாகத்தைக் கிண்டல் செய்து வருகின்றனர். 

 

முன்னதாக பாலிவுட் நடிகர் ராகுல் போஸ் 2 வாழைப்பழம் வாங்கியதற்கு  சண்டிகரில் உள்ள ஒரு ஹோட்டலில் 442 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், அந்த ஹோட்டல் நிர்வாகத்திற்குக் கலால் வரித்துறை 25,000 ரூபாய் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.

2018 TopTamilNews. All rights reserved.