மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடை நீக்கம்…. வடகிழக்கு மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடை நீக்கம்…. வடகிழக்கு மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

வடகிழக்கில் உள்ள 7 மாநிலங்களில் கடந்த ஏப்ரல் இறுதி வரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்து வந்தது. ஆனால் கடந்த மாதம் 4ம் தேதியன்று மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடையை மத்திய அரசு தளர்த்தியது வடகிழக்கு மாநிலங்களுக்கு பெரிய கேடாக அமைந்து விட்டது.

மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடை நீக்கம்…. வடகிழக்கு மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடை நீக்கப்பட்டதால் நாட்டின் பிற பகுதிகளிலிருந்து வடகிழக்கு மாநிலத்தவர்கள் தங்களது மாநிலங்களுக்கு திரும்ப தொடங்கினர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக வடகிழக்கு மாநிலங்களில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு வெளிமாநிலங்களிலிருந்து சொந்த மாநிலங்களுக்கு திரும்பியவர்கள்தான் முக்கிய காரணம் கூறப்படுகிறது.

மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடை நீக்கம்…. வடகிழக்கு மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

உதாரணமாக வடகிழக்கு மாநிலங்களில் அசாமில்தான் மக்கள் தொகை அதிகம். அம்மாநிலத்தில் கடந்த மே 5ம் தேதி நிலவரப்படி மொத்தமே 44 பேர்தான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருந்தனர். ஆனால் அதற்கு அடுத்த 4 வாரங்களுக்கு பிறகு கடந்த 2ம் தேதி நிலவரப்படி அந்த மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,513ஆக உயர்ந்துள்ளது. இதே காலத்தில் திரிபுரா (42லிருந்து 468ஆக உயர்வு), மேகாலயா (13லிருந்து 27ஆக உயர்வு), மணிப்பூர் (0லிருந்து 89ஆக உயர்வு), அருணாசல பிரதேசம் (0லிருந்து 22ஆக உயர்ந்தது) மற்றும் நாகலாந்து (0லிருந்து 49ஆக அதிகரிப்பு) ஆகிய மாநிலங்களில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.