கோவா தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி… இது வெறும் ஆரம்பம்தான்.. அரவிந்த் கெஜ்ரிவால் உற்சாகம்

 

கோவா தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி… இது வெறும் ஆரம்பம்தான்.. அரவிந்த் கெஜ்ரிவால் உற்சாகம்

கோவா ஜில்லா பஞ்சாயத்து தேர்தலில் ஒரு இடத்தில் வெற்றி பெற்று அம்மாநிலத்தில் தனது முதல் தேர்தல் வெற்றியை ஆம் ஆத்மி கட்சி பதிவு செய்துள்ளது. இது வெறும் ஆரம்பம்தான் என்று அரவிந்த் கெஜ்ரிவால் உற்சாகமாக தெரிவித்துள்ளார்.

சுற்றுலாவுக்கு பெயர் போன கோவாவில் முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் கடந்த 12ம் தேதியன்று ஜில்லா பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது. நேற்று முன்தினம் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த தேர்தலில் மொத்தமுள்ள 49 இடங்களில் 32 இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றது. காங்கிரஸ் வெறும் 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

கோவா தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி… இது வெறும் ஆரம்பம்தான்.. அரவிந்த் கெஜ்ரிவால் உற்சாகம்
கோவா ஜில்லா பஞ்சாயத்து தேர்தல் முடிவுகள்

அதேசமயம் ஆம் ஆத்மி கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்று அம்மாநிலத்தில் முதல் முதலாக தனது தேர்தல் வெற்றியை பதிவு செய்துள்ளது. தெற்கு கோவாவின் பெனவுலிம் ஜில்லா பஞ்சாயத்தில் ஆம் ஆத்மியின் வேட்பாளர் ஹான்சல் பெர்னாண்டஸ் வெற்றி பெற்றார். ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ள போதிலும் இது வெறும் ஆரம்பம்தான் என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

கோவா தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி… இது வெறும் ஆரம்பம்தான்.. அரவிந்த் கெஜ்ரிவால் உற்சாகம்
ஆம் ஆத்மி

அரவிந்த் கெஜ்ரிவால் டிவிட்டரில், கோவாவின் பெனவுலிம் ஜில்லா பஞ்சாயத்தில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மியின் வேட்பாளர் ஹான்சல் பெர்னாண்டஸூக்கு வாழ்த்துக்கள். பல ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் கடந்த முறையை காட்டிலும் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளனர். இது வெறும் ஆரம்பம்தான். கோவா மக்களின் நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப ஆம் ஆத்மி வளரும் என்று நான் நம்புகிறேன் என பதிவு செய்து இருந்தார்.