“ஒரு தலைமுறைக்கே பேரழிவு; ப்ளீஸ் அதை நிறுத்தாதீர்கள்” – தலிபான்களிடம் கெஞ்சி கேட்கும் யுனெஸ்கோ!

 

“ஒரு தலைமுறைக்கே பேரழிவு; ப்ளீஸ் அதை நிறுத்தாதீர்கள்” – தலிபான்களிடம் கெஞ்சி கேட்கும் யுனெஸ்கோ!

தலிபான்கள் எனும் பயங்கரவாதக் குழு இஸ்லாமியத்தின் சுன்னி பிரிவை முன்னெடுப்பவர்கள். அவர்களின் அரசியலமைப்புச் சட்டம் ஷரியத் சட்டம் தான். எல்லாமே அவர்களுக்கு அது மட்டும் தான். சிறு பெண் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லக் கூடாது. இளம்பெண்கள் உயர்கல்வி பயிலக் கூடாது. ஆண் துணையில்லாமல் கடைத்தெருவுக்குக் கூட செல்லக் கூடாது. மிக முக்கியமாக விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளவே கூடாது. அனுமதி உண்டு என்பதைக் காட்டிலும் கூடாது என்ற வார்த்தையையே ஆப்கான் பெண்கள் அதிகம் கேட்டு பழகியிருந்தனர்.

“ஒரு தலைமுறைக்கே பேரழிவு; ப்ளீஸ் அதை நிறுத்தாதீர்கள்” – தலிபான்களிடம் கெஞ்சி கேட்கும் யுனெஸ்கோ!

2001ஆம் ஆண்டு வரை நீடித்த இந்த நிலை அதற்குப் பின் மாறத் தொடங்கியது. அமெரிக்காவில் நிறுவப்பட்ட அரைகுறை ஜனநாயகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு கல்வி பயிலும் உரிமை வழங்கப்பட்டது. நினைத்தது போலவே முன்பிருந்ததை விட பெண்கள் கல்வியின் அவசியம் குறித்து அறிந்து பாடசாலைகளுக்கு சாரை சாரையாக வந்தனர். ஆணாதிக்கம் தொடர்பான விழிப்புணர்வு அவர்களுக்கு வந்தது. அரசாங்கத்தின் உயர் பதவிகளை அலங்கரித்தனர். இவ்வாறு எல்லாமே சென்று கொண்டிருக்க, அமெரிக்க சொந்த நாட்டுக்கு பேக் அடிக்க தலிபான்களின் கைகளுக்குள் மீண்டும் அகப்பட்டுக் கொண்டார்கள் ஆப்கான் பெண்கள்.

“ஒரு தலைமுறைக்கே பேரழிவு; ப்ளீஸ் அதை நிறுத்தாதீர்கள்” – தலிபான்களிடம் கெஞ்சி கேட்கும் யுனெஸ்கோ!

இன்னமும் முழுமையான அரசைக் கூட நிறுவுவதற்குள் பெண்களுக்கு அதிகப்படியான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். மிக முக்கியமாக இரு பாலரும் இணைந்து படிப்பதற்குத் தடை விதித்துள்ளனர். பெண்களுக்குப் ஆண் ஆசிரியர்கள் பாடம் எடுக்கக் கூடாது என்ற வாய்மொழி உத்தரவையும் பிறப்பித்திருக்கின்றனர். இச்சூழலில் பெண்களின் கல்வியைச் சீரழித்துவிடாதீர்கள் என ஐநாவின் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனமான யுனெஸ்கோ கெஞ்சாத குறையாக் தலிபான்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. யுனெஸ்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜனநாயக ஆட்சி அமைந்த பிறகு பள்ளி, கல்லூரிகளில் பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது.

“ஒரு தலைமுறைக்கே பேரழிவு; ப்ளீஸ் அதை நிறுத்தாதீர்கள்” – தலிபான்களிடம் கெஞ்சி கேட்கும் யுனெஸ்கோ!

கல்வியுறிவு சதவீதமும் உயரத் தொடங்கியது. தலிபான்கள் ஆட்சியில் தொடக்கக் கல்வியில் சிறுமிகள் ஒருவர் கூட இல்லை. ஆனால், 2018ஆம் ஆண்டில் 25 லட்சம் பேர் கல்வி பயின்றனர். தலிபான் ஆட்சியில் இருந்ததைவிட தற்போது பெண்களின் கல்வியறிவு சதவீதம் இரட்டிப்பாகியுள்ளது. ஆப்கனில் உள்ள பெண்கள், சிறுமிகளின் கல்விக்குப் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்துதான் உதவிகள் வழங்கப்பட்டன. ஆனால், தலிபான் ஆட்சிக்கு வந்தபின் அந்த உதவிகள் நிறுத்தப்பட்டன. இதெல்லாம் ஒரு தலைமுறைக்கே பேரழிவை ஏற்படுத்தும். அந்த நிலைக்கு தலிபான்கள் இட்டுச் செல்லக் கூடாது. அவர்களுக்கு கல்விபெறும் உரிமையை தலிபான்கள் உறுதிசெய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளது.