“அரசியலுக்கு வரலாமா? வேண்டாமா? என்று ஆலோசனை” : நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி!

 

“அரசியலுக்கு வரலாமா? வேண்டாமா? என்று ஆலோசனை” : நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி!

“இனியும் நான் அரசியலுக்கு வருவேனாங்குற கேள்வி எல்லாம் இருக்கு. அதுகுறித்து மன்ற நிர்வாகிகள் உடன் ஆலோசிக்க உள்ளேன்” என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

“அரசியலுக்கு வரலாமா? வேண்டாமா? என்று ஆலோசனை” : நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி!

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக கூறி பல ஆண்டுகள் ஓடிப்போன நிலையில் கடந்த 2017 ஆம் தேதி அரசியலுக்கு வரப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில், சட்டப்பேரவை தேர்தலுக்கு ரஜினி மக்கள் மன்றத்தினர் தயாராகி வந்தனர். ஆனால் கொரோனா மற்றும் உடல்நிலையை கருத்தில் கொண்டு ரஜினி தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்தார்.

இந்த சூழலில் நடிகர் ரஜினி, மக்கள் மன்ற நிர்வாகிகளை இன்று சந்தித்து பேசவுள்ளார். ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க மாவட்ட செயலாளர்களுக்கு தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மாற்று கட்சியில் இணைந்து வருவதால் இந்த கூட்டம் நடைபெறுகிறது. அத்துடன் அண்ணாத்த படம் வெளியாகவுள்ள நிலையில் இதுகுறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

“அரசியலுக்கு வரலாமா? வேண்டாமா? என்று ஆலோசனை” : நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி!

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நான் அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்த பிறகு நான் மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்கவில்லை. அதன்பிறகு அண்ணாத்த ஷூட்டிங் இருந்தது. தேர்தல் முடிவு, கொரோனா வந்தது. இதனால் நிர்வாகிகளை சந்திக்க முடியவில்லை. அமெரிக்காவில் உடல்பரிசோதனையை முடித்து கொண்டு சென்னை திரும்பியுள்ளேன். மக்கள் மன்ற நிர்வாகிகளின் பணி என்ன? மக்கள் மன்றத்தை தொடரலாமா என்பது குறித்து ஆலோசிக்க உள்ளேன். எதிர்காலத்தில் அரசியலுக்கு நான் வரப்போகிறேனா? இல்லையா? என்ற கேள்விகளும் இருக்கிறது; அது குறித்து மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் ஆலோசிக்க உள்ளேன் என்றும் நடிகர் ரஜினிகாந்த் பேட்டியளித்துள்ளார். மீண்டும் அரசியலுக்கு வருவேனா? மாட்டேனா என்று ரசிகர்கள் மற்றும் மக்கள் மன்ற நிர்வாகிகள் மத்தியில் எழுந்துள்ளது. இதுகுறித்து மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசிக்கவுள்ளதாக கூறியுள்ளார்.